விஜய்யும், திரிஷாவும் விரைவில் கணவன், மனைவி.. ஒன்றாக இருக்கிறார்கள்.. நடிகை இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: விஜய் கடந்த 15ஆம் தேதி தலைமை செயலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றினார். அப்போது திரிஷாவும், அவரது தாய் உமாவும் வந்திருந்தது, முதல் வரிசையில் அமர்ந்திருந்தது எல்லாம் பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பின. இந்நிலையில் அதுகுறித்து நடிகை சஞ்சனா கல்ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். அவரது நிர்வாக ரீதியான செயல்பாடுகள் விமர்சனத்தையும், பாராட்டையும் ஒருசேர பெற்றுவருகின்றன. இதுதவிர்த்து அவரையும் திரிஷாவையும் இணைத்து அவருக்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து அட்டாக் செய்துவருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் கொடி ஏற்றினார். அந்த விழாவுக்கு விஜய்யின் பெற்றோர்கள் மட்டுமின்றி திரிஷாவும், அவரது தாய் உமாவும் வந்து கலந்துகொண்டார்கள்.
சஞ்சனா பேட்டி: அந்த விஷயம் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை சஞ்சனா கல்ராணி சமீபத்தில் அளித்த பேட்டியில், "உங்களுக்கு தைரியம் இருந்தால் விஜய்யின் நிர்வாகத்தை பற்றி பேசுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் ஒரு பெண்ணை பற்றி பேசுகிறீர்கள்?.. விஜய்யின் நிர்வாகத்தை பற்றி குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால்தான் அவரது பெர்சனல் வீக்னெஸை டார்கெட் செய்து அவரை குறை சொல்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமில்லை ஒட்டுமொத்த நாடும் அவரது செயல்பாடுகளை பாராட்டுகிறது.
ரொம்ப ஆக்டிவ்: அவரது சோஷியல் மீடியா டீம் இரவு முழுவதும் செம ஆக்டிவ்வாக இருக்கிறது. சாலைகள், தண்ணீர் பிரச்னை, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் என்று பல நல்ல காரியத்தை செய்கிறார். நேற்று முதலமைச்சரானார். இன்று நிறைய திட்டங்கள் வந்திருக்கின்றன. விஜய்தான் அடுத்த பிரதமர் என்று சோஷியல் மீடியாவிலும் பேசுகிறார்கள். அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அரசியல்வாதியாக அவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பெண்களை மதியுங்கள்: யாராக இருந்தாலும் பெண்களை மதிக்க வேண்டும். திரிஷா ஒரு வெற்றி பெற்ற நடிகை. அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அவர்கள் நண்பர்களோ, கணவர் மனைவியோ அல்லது காதலர்களோ அதெல்லாம் அவர்களது தனிப்பட்ட விருப்பம். எதற்காக அவர்களை நீங்கள் மதிப்பிடுகிறீர்கள். அரசியலில் விஜய் செய்திருக்கும் சாதனை பற்றி பேசுங்கள்.
எதையும் கண்டுபிடிக்க முடியாது: அவரிடம் உங்களால் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியாது. அதற்காக ஒரு பெண்ணை குறிவைப்பது சரியே இல்லாஇ. விஜய், திரிஷா அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். காதலி மனைவியான பிறகு எல்லோரும் அமைதியாகிவிடுவார்கள். அதுவும் விரைவில் நடக்கும் என என்னுடைய உள்மனது சொல்கிறது" என்றார்.