வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்
வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்
வங்காள விரிகுடா கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது குறித்து...
ஒடிசாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற சரக்கு கப்பல், வங்காள விரிகுடா கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 22 பேரையும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல், ஒடிசாவிலிருந்து 1,700 டன் இரும்புத் தாது கனிமங்களை எடுத்துக்கொண்டு, சனிக்கிழமையில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. இந்தக் கப்பலில் சீனா, மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த 24 பேர் இருந்தனர்.
இந்த நிலையில், ஒடிசாவிலிருந்து 240 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது.
இதனிடையே, சனிக்கிழமை (ஆக. 22) காலை 11.48 மணியளவில் கப்பலுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக, கப்பலை இயக்கும் நிறுவனமான விக்டரி ஸ்டார் குரூப் கோ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, விபத்து குறித்து உடனடியாக கப்பலின் மாலுமிகள், அவசர அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினர் மற்றும் கடலோரக் காவற்படையினரும் விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 22 பேரையும் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
Singapore-bound vessel with 24 crew members sinks off Indian coast
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.