📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 14, 2026 05:03 AM

வணக்கம் வைத்த முதல்வர்

வணக்கம் வைத்த முதல்வர்

வணக்கம் வைத்த முதல்வர்- தெனாவட்டாக அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குள் வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்கும் அதே நேரத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் அமர்ந்திருப்பது போன்ற காணொலி வைரலாகிவருகிறது.

தலைமை பண்பு துளி அளவும் இல்லாத உதயநிதி, ஸ்டாலின் மகனாக இல்லை என்றால் ஒரு கவுன்சிலரா கூட வந்துருக்க மாட்டான் என்பது தான் நிதர்சனமான உண்மை! pic.twitter.com/HkETu5WT5c

முதலமைச்சர் பதவி என்பது ஒருவருடைய குடும்பத்திற்கோ, கட்சிக்கோ சொந்தமான பதவி அல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயகத் தீர்ப்பால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பொறுப்பாகும். அந்தப் பதவியில் இருப்பவருக்கு மரியாதை செலுத்துவது அவருடைய தனிப்பட்ட நபருக்கு அடிபணிவது அல்ல. மக்களின் ஜனநாயக உரிமைக்கும், சட்டமன்றத்தின் மாண்புக்கும் மரியாதை செலுத்துவது போன்றது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல என்றும் சட்டமன்றத்தில் நடந்து கொள்ளும் விதமே ஒரு அரசியல்வாதியின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. விமர்சித்துவருகின்றனர்.