📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 15, 2026 12:03 AM

வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி

வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார்.

எம்.பி.பி.எஸ். சீட்

மருத்துவ படிப்பு ஆசை

"சாதிக்க வயது ஒரு தடையில்லை" என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை.

மருத்துவ கலந்தாய்வு

இந்த நிலையில் 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார். ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது.

நீட் தேர்வு

அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார். 2019-ல் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்திருக்கிறார்.

இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், 'ரத்த பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். இப்போது என்னுடைய வேலையை உதறிவிட்டு, படிப்பை தொடர போகிறேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க போகிறேன். நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன்' என்றார்.