📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 30, 2026 07:03 AM

 3 மாதமாக குடிநீர் இல்லை பொதுமக்கள் சாலை மறியல்

 3 மாதமாக குடிநீர் இல்லை பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம்: தாராபுரம் அருகே பொம்மநாயக்கன்பட்டியில் 3 மாதங்களாக குடிநீர், உப்பு தண்ணீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தாராபுரம்-பூளவாடி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற குண்டடம் போலீசார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, வி.ஏ.ஓ. மூர்த்தி ஆகியோர் பேச்சு நடத்தினர். இதில், இனி 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.