📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology May 28, 2026 02:33 AM

இனி 5 நொடி தான்.. விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்க மலேசியாவின் புதிய முயற்சி!

இனி 5 நொடி தான்.. விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்க மலேசியாவின் புதிய முயற்சி!

இனி 5 நொடி தான்.. விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்க மலேசியாவின் புதிய முயற்சி!

மலேசியாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு குடியுரிமைச் சோதனை இனி மிக வேகமாக நடைபெற உள்ளது.

மலேசியாவில் புதிய முறை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, ஒவ்வொரு பயணிக்கும் குடியுரிமைச் சோதனை வெறும் 4 முதல் 5 விநாடிகளில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விமான நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறையுவதுடன், பயணிகள் மிகவும் விரைவாக சோதனைகளை முடித்து செல்ல முடியும்.

மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுத்தீன் நசூஷன் இஸ்மாயில் கூறுகையில், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தானியங்கி நுழைவு வாயில்கள் மூலம் குடியுரிமைச் சோதனை 5 விநாடிகளுக்குள் முடிவடைகிறது என்றார். இந்த புதிய தொழில்நுட்பம் பயணிகளின் அனுபவத்தை முற்றிலும் மாற்றும் முக்கிய முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய மைஎன்ஐஐஎஸ் அமைப்பில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம், க்யூஆர் குறியீடு மற்றும் கடவுச்சீட்டு சரிபார்ப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதுகாப்பு குறையாமல், மிக வேகமாக பயணிகளின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'மைஐஎம்எம்எஸ்' (MyIMMs) அமைப்புக்கு பதிலாக இந்த புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மலேசிய அரசு சுமார் 1 பில்லியன் மலேசிய ரிங்கிட், அதாவது சுமார் 255 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பழைய முறையில் பயணிகள் முதலில் கடவுச்சீட்டை ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. அதன் பிறகு கைரேகை மற்றும் முக அடையாளம் மூலம் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால் புதிய முறையில் அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்த முறையில் தானாக சரிபார்க்கப்படும்.

மேலும், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கச் சோதனைக்கும் தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சுங்கவரி செலுத்த வேண்டிய பொருட்கள் இல்லாதவர்கள் ஒரு வழியாகவும், அறிவிக்க வேண்டிய பொருட்கள் கொண்டவர்கள் மற்றொரு வழியாகவும் செல்ல முடியும்.

இதனுடன், மலேசிய எல்லை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முக்கிய நுழைவாயில்களில் கூடுதல் அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் கண்காணிப்பு, கூட்டநெரிசல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.