📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 15, 2026 09:30 PM

சிறிய வகை கார்களுக்கான ‘சிஓஇ’ குறைந்தது

சிறிய வகை கார்களுக்கான ‘சிஓஇ’ குறைந்தது

சிங்கப்பூரில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற வாகன உரிமைச் சான்றிதழ் ஏலக் குத்தகையில், சிறிய கார்களுக்கான ‘ஏ’ பிரிவுக் கட்டணம் 1.7 விழுக்காடு சரிந்து $123,890ஆகப் பதிவானது.

அதேவேளையில், பெரிய கார்களுக்கான ‘பி’ பிரிவுச் சான்றிதழ் கட்டணம் $20 மட்டுமே உயர்ந்து, பெரிய மாற்றமின்றி $129,910ஆக நிலைப்பெற்றது. பொதுப் பிரிவான ‘இ’ பிரிவுச் சான்றிதழ் கட்டணம் 0.8 விழுக்காடு உயர்ந்து $131,000ஐ எட்டியது.

சரக்கு வாகனங்களுக்கான ‘சி’ பிரிவுச் சான்றிதழ் கட்டணம் 2.5 விழுக்காடு குறைந்து $91,545ஆகப் பதிவானது.

மோட்டார் சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவுச் கட்டணம் 3 விழுக்காடு உயர்ந்து $10,503ஐ எட்டியது. நடப்பாண்டில் மோட்டார் சைக்கிள் கட்டணம் $10,000ஐ தாண்டுவது இது ஐந்தாவது முறையாகும்.