📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 27, 2026 03:31 PM

6 ஆண்டு கால சாதனை முடிவுக்கு வந்தது.. நியூசிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் கூட ஆடாத சிராஜ்

6 ஆண்டு கால சாதனை முடிவுக்கு வந்தது.. நியூசிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் கூட ஆடாத சிராஜ்

6 ஆண்டு கால சாதனை முடிவுக்கு வந்தது.. நியூசிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் கூட ஆடாத சிராஜ்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் முகமது சிராஜ் சேர்க்கப்படாததால், கடந்த 6 ஆண்டுகளாக அவர் தக்கவைத்திருந்த ஒரு அரிய சாதனை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் முகமது சிராஜ். அப்போது முதல் இதுவரை இந்தியா விளையாடிய எந்தவொரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டியில் கூட ஆடாமல் சிராஜ் வெளியே உட்கார வைக்கப்பட்டதில்லை. தற்போது முதல்முறையாக நியூசிலாந்து தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

வெலிங்டன் முதல் டெஸ்டில் சிராஜ் இல்லாததால் இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறி போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் கிறைஸ்ட்சர்ச் 2வது டெஸ்டிலாவது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக இளம் வீரர் குர்னூர் ப்ராரை அறிமுகம் செய்த அணி நிர்வாகம், சிராஜை மீண்டும் வெளியே அமர வைத்தது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 11 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் முதன்மை பந்துவீச்சாளராக சிராஜ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

சிராஜின் வெளிநாட்டு டெஸ்ட் புள்ளிவிவரங்கள் பிரமிக்க வைக்கின்றன. தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சிராஜ், அதில் 108 விக்கெட்டுகளை வெளிநாட்டு மண்ணில் 29 போட்டிகளில் எடுத்துள்ளார். டெஸ்டில் அவர் எடுத்துள்ள 5 முறை ஐந்து விக்கெட் சாதனைகள் அனைத்துமே வெளிநாடுகளில் வந்தவைதான். குறிப்பாக இங்கிலாந்தில் 46 விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவில் 33 விக்கெட்டுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 12 விக்கெட்டுகள் என மூன்று முக்கிய நாடுகளில் மட்டும் 23 டெஸ்டுகளில் 91 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

கடந்த ஆண்டு ஓவல் டெஸ்டில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்த சிராஜ், அதன்பின் ஆசிய கண்டத்தில் நடந்த 7 டெஸ்ட் போட்டிகளிலும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜுடன் சேர்த்து சீனியர் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் தொடர்ந்து 2வது போட்டியாக நீக்கப்பட்டுள்ளார். சிறப்பான வெளிநாட்டு சாதனைகள் இருந்தும் நியூசிலாந்தில் ஒரு போட்டியில் கூட ஆடாமல் சிராஜ் ஓரங்கட்டப்பட்டது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.