📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 27, 2026 11:30 PM

தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பாக சிறுவர் தின கொண்டாட்டம்

தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பாக சிறுவர் தின கொண்டாட்டம்

தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பாக கடந்த சிறுவர் தின கொண்டாட்டம் டைமண்ட் ஜூப்ளி அரங்கத்தில் தமிழ் சங்கத்தின் தலைவர் அருண் வெங்கடாசலம், துணைத் தலைவர் கண்ணன் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. தான்சானியா இந்திய தூதரகத்தின் உயர் ஆணையர் பிஸ்வதிப் தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தான்சானியா மற்றும் இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழ் சங்கத்தின் நல உதவி சார்பாக Tzs 20 million Tsh மதிப்புள்ள காசோலை மற்றும் Oyster bay secondary school கழிவறை கட்டிடம் புதுப்பிக்க 10 million Tsh அவர்களுக்கு வழங்கப்பட்டது. Tanzania Tamil Sangam Team Junior & Senior Team, Noopur School of Dance, ஆகியோர்களின் கலை கலை நிகழ்ச்சி உடன் Indian School Tanzania, Shree Patel Samaj, Kaveri Kannada Sanga, Kalamandalam Tanzania, Tarangini Telugu Cultural Association, Hindi Hain Hum, Shree Bhatia Mahajan, Swarn Ganga ஆகிய கலை குழுக்கள் பங்கு பெற போட்டி ஆரம்பமானது.1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக மீத்தேல் கிருபாகரன், ரஜ்பீர் கபூர், துருஷால் வர்மா பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணியினருக்கு தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.தலைவர்: அருண் வெங்கடாசலம், துணைத் தலைவர்: கண்ணன் கலியபெருமாள். செயலாளர்: ரோசாரியோ அருண் ஜார்ஜ், பொருளாளர்: மெரிசன் பத்ரோஸ், கலாச்சார செயலாளர்: வருணா அருண். குழு உறுப்பினர்கள்: செல்வகுமார் சிதர் செல்வின், பார்த்திபராஜ், ஹரிஹரன் சண்முக சுந்தரம், ஹரி பிரசாத், அரிகரன் சுந்தரம், ராஜ்குமார் காமராஜ்- தான்சானியாவிலிருந்து நமது செய்தியாளர் தானேஷ் ராஜா