90 அடியை எட்டியது மேட்டூர் அணை
90 அடியை எட்டியது மேட்டூர் அணை
மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில், கடந்த 2 நாட்களாக நீர்வரத்து 6,500 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 7500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்கு நேற்று 14வது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 7,094 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 7022 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்திறப்பைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 89.61 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 90.07 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 52.73 டி.எம்.சி.யாக உள்ளது. கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 6600 கனஅடி வீதமும், கேஆர்எஸ் அணையில் இருந்து 4712 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.