📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 01, 2026 10:04 AM

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்: ஜோர்டானில் பதற்றம்

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்: ஜோர்டானில் பதற்றம்

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்: ஜோர்டானில் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) திங்கள்கிழமை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் சில மாதங்களாக தணிந்திருந்த போர் பதற்றம், இந்த அடுத்தடுத்த பரஸ்பர தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஈரானிய அரசு ஊடகங்களின்படி, ஜோர்டானில் அமைந்துள்ள கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ராக் ஆகிய அமெரிக்க ராணுவ வான்படைத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்கத் தளங்களில் உள்ள தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள், பராமரிப்பு மையங்கள் மற்றும் போர் விமானப் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து பாய்ந்து வந்த 8 ஏவுகணைகளைத் தங்களது வான்வெளி பாதுகாப்பு மண்டலத்தில் இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குச் சில மணி நேரத்திற்கு முன்பு, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாராக் தீவில் அமைக்கப்பட்டிருந்த ஈரானின் 2 ராக்கெட் ஏவுகணைகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தகர்த்தெறிந்தது.

பன்னாட்டு நாவாய் வழிகளில் கடல் கண்ணிவெடிகளைச் (Sea mines) செலுத்துவதற்காக ஈரான் ராணுவம் ஆயத்தமான போது இந்தத் தடுப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கியுள்ளது.

இந்த அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக ஈரான் புரட்சிகர காவல் படை உறுதிப்படுத்தியுள்ளது.