📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 01, 2026 12:04 PM

“சோசியல் மீடியாவில் மட்டுமே நீ சிறந்த வீரன்”.. பாகிஸ்தான் கிங் பாபர் அசாமை வறுத்தெடுத்த பாசித் அலி

“சோசியல் மீடியாவில் மட்டுமே நீ சிறந்த வீரன்”.. பாகிஸ்தான் கிங் பாபர் அசாமை வறுத்தெடுத்த பாசித் அலி

“சோசியல் மீடியாவில் மட்டுமே நீ சிறந்த வீரன்”.. பாகிஸ்தான் கிங் பாபர் அசாமை வறுத்தெடுத்த பாசித் அலி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை முன்னாள் வீரர் பாசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணி கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் போதெல்லாம் பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் கிங் என பாபர் அசாமுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் விளாசி இருக்கிறார் பாசித் அலி. கடந்த ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு விளையாடிய பாபர் அசாம் 8 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 2026 ஆம் ஆண்டில் 8 டெஸ்டில் விளையாடி இருக்கும் பாபர் அசாம், அவற்றில் 322 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக அவரால் ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்க முடியவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக அவரது பேட்டிங் செயல்பாடு சராசரியாகவே உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்விகளை அடைந்து வரும் நிலையில் பாபர் அசாமுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.