📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 19, 2026 03:33 PM

தேசியச் சம்பள மன்றத் தலைவர் மாற்றம், சிங்க‌ப்பூர் செய்திகள்

தேசியச் சம்பள மன்றத் தலைவர் மாற்றம், சிங்க‌ப்பூர் செய்திகள்

தேசியச் சம்பள மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் பீட்டர் சியா, தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக மனிதவள அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்தது.

நன்கு ஆலோசித்த பிறகு அவரின் கோரிக்கையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்ததாக அமைச்சு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது. திரு சியெ ஃபு ஹுவா, திரு சியாவிடமிருந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

75 வயது சியே, இம்மாதம் 7ஆம் தேதி தேசியச் சம்பள மன்றத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

79 வயது சியா, 2015ஆம் ஆண்டிலிருந்து தேசியச் சம்பள மன்றத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்துள்ளார். அந்த மன்றம், சம்பளம் தொடர்பான வழிகாட்டிமுறைகளை வரையும் முத்தரப்புக் குழுவாகும்.

திரு சியா, டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லசால் கலைக் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர், டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின், அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபடாத தலைவராகத் (non-executive chairman) தொடர்ந்து பொறுப்பு வகிப்பார் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. அவர் இன்னமும் தங்களின் தலைவராகப் பொறுப்பு வகிப்பதாக லசால் தெரிவித்தது.

தலைமைத்துவ மாற்றத்திற்கு டிபிஎஸ் வங்கி திட்டம்

இதற்கிடையே, டிபிஎஸ் வங்கியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான திட்டத்தை டிபிஎஸ் வங்கிக் குழுமம் வரைந்துவருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

16 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரு சியா, டிபிஎஸ் வங்கியின் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்துள்ளார்.

அவர் 2009ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ்ஸின் நிர்வாகக் குழுவில் இணைந்தார். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு அவர் அந்த வங்கியின் தலைவரானார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தமது பொறுப்பை அவர் நிறைவேற்றியுள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறினர். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

டிபிஎஸ் ஹாங்காங் பிரிவின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் திரு சியா வகிக்கிறார். அத்துடன், கணக்குத் தணிக்கை, தொழில்நுட்பம், நிர்வாக மேம்பாடு, பரிந்துரைப்பு உள்ளிட்ட குழுக்களில் அவர் உறுப்பினராக இருப்பதாகவும் டிபிஎஸ் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.