📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 31, 2026 04:31 PM

அம்மன் நகைக்கு 5 கோடி.. கார்த்திக்கின் சிங்கப்பூர் பிளான்.. சிக்குவாரா சிவனாண்டி.. கார்த்திகை தீபம்!

அம்மன் நகைக்கு 5 கோடி.. கார்த்திக்கின் சிங்கப்பூர் பிளான்.. சிக்குவாரா சிவனாண்டி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திக் ஊர் மக்களை ஒன்று சேர்த்து, ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு நகைகள் சாத்தி சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று சொல்கிறார். இதைக் கேட்ட சிவனாண்டி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். உடனே கார்த்திக், யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்க, ஊர் மக்கள் அனைவரும் "நீங்க சொல்றது சரிதான்" என்று அவருக்கு முழு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் அம்மன் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

கார்த்திகை தீபம்: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரேவதி, கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். மாமா எவ்வளவு நம்ம மேல அன்பு வெச்சு இருக்காரு அவருக்கு நாம எதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து, கார்த்திக்காக விதவிதமாக சமைத்து கொடுக்க முடிவு செய்யும் ரேவதி, கீழே கிச்சனுக்கு வந்து அங்கிருந்த ரோகிணி மற்றும் சுவாதியை நைசாக அனுப்பிவிட்டு சமையல் வேலையில் இறங்குகிறாள். கார்த்திக்குப் பிடித்த சிக்கன், மட்டன், மீன் பலவற்றை செய்து அசத்துகிறாள்.

கார்த்திக்கிற்காக சமைக்கும் ரேவதி: இதையெல்லாத்தையும் பார்த்த ரோகிணி யாருக்கு இப்படி சமைச்சு எடுத்துக்கிட்டு போற என்று கேட்க, இதெல்லாம் தோழிக்காக சமைப்பதாக சொல்லி, சாப்பாட்டை எடுத்து செல்கிறார். கிளம்பும் போது சந்திரகலா வந்துவிட, சந்திரகலாவை வம்புக்கு இழுக்கும் ரேவதி, இந்த உணவுகள் அனைத்தும் கார்த்திக்காக நானே என் கையால் சமைத்து எடுத்து செல்கிறேன் என சொல்கிறாள். இதையடுத்து சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் இந்த விஷயத்தை போட்டுக் கொடுக்க, சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை நம்பாமல், பொதும் நிறுத்து சந்திரா உனக்கு இதே வேலையா போச்சு, ரேவதி அவ பிரண்டுக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போவதாகத்தான் சொன்னா என சொல்கிறாள்.

கார்த்திக்கின் பிளான்: மறுபக்கம், மயில்வாகனம் சிங் வேடத்தில் முத்துவேலை சந்தித்து, வெளிநாட்டில் இருந்து வந்த தொழிலதிபர் என அறிமுகப்படுத்திக் கொள்கிறான். தனக்கு சிவனாண்டியின் தொடர்பு வேண்டும், அவருடன் தொழில் செய்ய விருப்பம் இருப்பதாக கூறுகிறான். முத்துவேலும் அவனை சிவனாண்டியிடம் அறிமுகப்படுத்துகிறான். அப்போது கோவில் நகைகளை கைப்பற்றித் தந்தால் ரூ.5 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி, சிவனாண்டியை தனது வலையில் சிக்க வைக்க முயல்கிறான் மயில்வாகனம். இந்த விஷயத்தை மயில்வாகனம் கார்த்திக்கு போன் செய்து, சகல நீ என்ன சொன்ன சொன்னியோ எல்லாத்தையும் முத்துவேல் கிட்ட சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார்.

மறுபக்கம், கார்த்திக்காக சமைத்த உணவுவை எடுத்துக்கொண்டு ரேவதி வீட்டுக்கு வருகிறார். இதைப்பார்த்த கார்த்திக், என்ன ரேவதி எதுக்கு நீ இங்க வந்தே என்று கேட்கிறார். சிவனாண்டி மயில்வாகனத்தின் திட்டத்தில் சிக்குவாரா? கார்த்திக்கின் அடுத்த பிளான் என்ன? ரேவதி - கார்த்திக் சந்திப்பில் என்ன நடக்கப் போகிறது? என்பதைக் காண கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.