📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 27, 2026 05:01 PM

அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார் கைது

அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார் கைது

அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார் கைது

*மகன் மருத்துவமனையில் அனுமதி; சூலூரில் பயங்கரம்

சூலூர் : சூலூர் அருகே தான் தங்கி இருந்த மாடி அறையின் மின் இணைப்பை மகன் துண்டித்ததால் ஆத்திரத்தில் மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கங்கல் கிராமத்தில் அபிராமி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் மாடசாமி மகன் செல்வகுமார் (36). இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், மகன், மகளும் உள்ளனர். செல்வகுமாரின் தந்தை மாடசாமியும், அவரது தாயும் மாடி அறையில் தங்கி இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடசாமி தனது மகன் செல்வகுமார் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது மருமகளை தவறாக பேசியதால் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது செல்வகுமாரின் அண்ணன் தங்கராஜ் சூலூரில் வீடு கட்டி வருவதால் தந்தை மாடசாமியை அழைத்து வந்து மேற்பார்வைக்காக அமர்த்தியுள்ளார். அதனால் மாடசாமியும், அவரது மனைவியும் தனது மகனின் வீட்டில் உள்ள மேல் மாடி அறையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மருமகளுக்கும், மாமனாருக்கும் பிரச்னை ஏற்பட்டது. எனவே மாடசாமியை ஊருக்கு சென்று விடுங்கள் என அவரது மகன் செல்வக்குமார் கூறியுள்ளார். அதை மறுத்த மாடசாமி, இங்கேதான் இருப்பேன் என பிடிவாதமாக இருந்தார். கடந்த 24-ம் தேதி செல்வகுமார் தனது தந்தை மாடசாமி குடியிருக்கும் மாடி அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி அதிகாலையில் வாக்கிங் செல்வதற்காக வந்த மருமகள் நந்தினியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் நந்தினி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். ஆத்திரம் அடங்காத மாடசாமி வீட்டின் உள்ளே சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் செல்வகுமாரையும் முகத்தில் அரிவாளால் வெட்டினார். அரிவாளால் வெட்டியதில் வலி தாங்க முடியாமல் செல்வகுமார் அலறித் துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்வகுமார், நந்தினி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார், மாடசாமியை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பலத்த காயமடைந்த மருமகள் நந்தினி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து நந்தினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சூலூர் போலீசார் அனுப்பி வைத்தனர். அடிதடி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.