📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 08:33 AM

“சாமி வந்துவிட்டது” திமுக எம்எல்ஏ திடீர் ஆவேசம்

“சாமி வந்துவிட்டது” திமுக எம்எல்ஏ திடீர் ஆவேசம்

“சாமி வந்துவிட்டது” திமுக எம்எல்ஏ திடீர் ஆவேசம்

சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் விஜய், மிசா, அமலாக்கத்துறை மற்றும் சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் நேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி அவைக்காவலர்கள் திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற முயன்றனர். அப்போது தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த வால்பாறை எம்எல்ஏ குட்டி என்ற சுதாகர் திடீரென ஆவேசமாக துள்ளத் தொடங்கினார். இதனால் சட்டசபையில் இருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதனை பார்த்த சபாநாயகர், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு அவைக்காவலர்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து 5 அவைக்காவலர்கள் இணைந்து சுதாகரை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது தனக்கு திடீரென “சாமி வந்துவிட்டது” என்று சுதாகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்றபோது முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சட்டசபையில் இல்லை.