📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 03:33 AM

சாதாரண டீ பிரச்னை.. 2 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த காதல் கல்யாணம்.. திருட்டு மாமியார்.. டிவி நடிகை கதறல்

சாதாரண டீ பிரச்னை.. 2 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த காதல் கல்யாணம்.. திருட்டு மாமியார்.. டிவி நடிகை கதறல்

மும்பை: கணவருக்கு எதிராகவும் மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமை கொடுத்ததாக இந்தி சீரியல் நடிகை அதிதி ஷர்மா புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஏகப்பட்ட பெண்கள் திருமணத்துக்குப் பிறகு குடும்ப வன்முறைகளையும் வரதட்சணை கொடுமைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வேறொரு வாழ்க்கையையும் வாழத் தொடங்குகின்றனர். பிரபல இந்தி சீரியல் நடிகை அதிதி வர்மா கடந்த 2024ம் ஆண்டு தான் சின்னத்திரை நடிகர் அபிநீத் வித்யானந்த் கெளசிக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

ஆனால், திருமணம் ஆனதில் இருந்தே கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து துன்புறுத்தினர் என்றும் கெட்ட வார்த்தைகளில் திட்டி அசிங்கப்படுத்தினர் என்றும் கோரேகான் காவல் நிலையத்தில் அதிதி ஷர்மா புகார் அளித்த நிலையில், அபிநீத் வித்யானந்த் கெளசிக் மீதும் அவரது அம்மா மற்றும் சகோதரி மீதும் எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

யாரு இந்த அதிதி ஷர்மா?: 1996ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி டெல்லியில் பிறந்தவர் தான் இந்த அதிதி ஷர்மா. 2018ம் ஆண்டு கலீரன் எனும் இந்தி டிவி தொடரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து நாகினி 3வது சீசனில் நடித்த இவர் ஃபியர் ஃபேக்டர் கத்ரோன் கே கில்லாடி 14வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். 2021ல் ஜீ5 ஓடிடியில் வெளியான கிராஷ் எனும் வெப்சீரிஸில் நடித்துள்ளார். அப்போலினா, ஜாது தெரி நாஸர் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணமாகி 2 ஆண்டுகளில் விவாகரத்து: கடந்த 2021ம் ஆண்டு ஆன்லைன் ஆக்டிங் கிளாஸ் மூலம் ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாற கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி அபிநீத் வித்யானந்த் கெளசிக்கை திருமணம் செய்துக் கொண்டார். திருமண போட்டோக்களை சந்தோஷமாக ஷேர் செய்து திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த அதிதி ஷர்மா அதன் பின்னர் சந்தோஷமாகவே வாழவில்லை என்றும் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோரும் கொடுமைப்படுத்துவதாக கோரேகான் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த ஜூலை 30ம் தேதி மூவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைகளை கொடுக்க மறுக்கும் மாமியார்: தனக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாக கணவர் சந்தேகத்தை கிளப்பியதுடன் என் செல்போனை அடிக்கடி சோதித்தும் பார்ப்பார். சாதாரண டீ பிரச்னையில் ஆரம்பித்த சண்டை இன்று விவாகரத்து வரை சென்று விட்டது. திருமணத்தின் போது நான் அணிந்து வந்த தங்க, வைர நகைகளை என் மாமியார் எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என புகாரில் நடிகை தெரிவித்துள்ளார்.