📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 29, 2026 01:32 PM

செங்கல்பட்டில் மதநல்லிணக்க ஊர்வலம்

செங்கல்பட்டில் மதநல்லிணக்க ஊர்வலம்

செங்கல்பட்டு: திருப்​பரங்​குன்​றம் விவகாரத்​தில் உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை மறு​பரிசீலனை செய்ய வலியுறுத்​தி​யும், மதநல்லிணக்கம் மற்​றும் மக்​கள் ஒற்​றுமையைப் பாது​காக்​கக் கோரியும் செங்கல்​பட்​டில் இடதுசா​ரிக் கட்​சிகள் உள்​ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்​பில் மதநல்​லிணக்க அமைதி ஊர்வலம் மற்​றும் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

திருப்பரங்குன்​றத்​தில் வழக்​கத்​துக்கு மாறாக நில அளவைக் கல்லில் தீபம் ஏற்​றச் செல்​வது தொடர்​பான உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை நிறுத்​திவைக்க வேண்​டும் என்​றும், அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை​யி​லான மதநல்​லிணக்​கம் மற்​றும் மக்​கள் ஒற்​றுமையைப் பாது​காக்க வேண்​டும் என்​றும் வலியுறுத்தி இந்​த அமைதி ஊர்​வலம் நடை​பெற்​றது. இதன்படி செங்​கல்​பட்டு கோட்டாட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் இருந்து தொடங்​கிய இந்த ஊர்​வலம் முக்கிய வீதிகளில் வந்து அம்​பேத்​கர் சிலை அருகே நிறைவடைந்​தது.

தொடர்ந்து அங்கு கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலக்​குழு உறுப்​பினர் எஸ்.நம்​புராஜன், மாவட்​டச் செய​லா​ளர் ப.சு.பாரதி அண்ணா, இந்திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட இணைச் செய​லா​ளர் வீராசாமி, இந்​திய கம்​யூனிஸ்ட் மார்க்​சிஸ்ட் லெனி​னிஸ்ட் விடுதலை கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் இரணி​யப்​பன், மனிதநேய மக்​கள் கட்சி நிர்​வாகி நூர்​முக மது, விடுதலைச் சிறுத்தைகள் கட்​சி​யின் மாநில அமைப்​புச் செய​லா​ளர் செங்கை தமிழரசன், மாவட்​டச் செய​லா​ளர் தென்​னவன் உள்​ளிட்ட பலர் பங்​கேற்று கோரிக்​கைகளை வலியுறுத்​திப் பேசினர்.