சென்னை சென்ட்ரல்
சென்னை சென்ட்ரல்-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை: அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போத்தனூர்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06028) வருகிற 4ம் தேதி முதல் 27ம் தேதி வரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போத்தனூர் சந்திப்பில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படுகிறது. திருப்பூருக்கு 8.28 மணிக்கும், ஈரோட்டுக்கு 9.20 மணிக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு செல்கிறது.
இதேபோல் சென்னை சென்ட்ரல்- போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06027) வருகிற 4ம் தேதி முதல் 27ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. சேலத்துக்கு இரவு 11.7 மணிக்கும், ஈரோட்டுக்கு நள்ளிரவு 12.05 மணிக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக போத்தனூருக்கு அதிகாலை 3 மணிக்கு சந்திப்பை சென்றடையும்.