📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 05:01 PM

சென்னை மேயர் எங்க பேச்சே கேக்குறதில்ல... திமுகவிடம் Complaint செய்த அமைச்சர்!

சென்னை மேயர் எங்க பேச்சே கேக்குறதில்ல... திமுகவிடம் Complaint செய்த அமைச்சர்!

சென்னை மேயர் எங்க பேச்சே கேக்குறதில்ல... திமுகவிடம் Complaint செய்த அமைச்சர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாநகராட்சிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். மேலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும், பல மாநகராட்சிகளில் பணிகளை செயல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக சென்னை மாநகராட்சியை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “சென்னை மேயர் இந்த அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை” என பேரவையில் தெரிவித்தார். மாநகராட்சி மேயர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அவர்கள் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அரசின் திட்டங்கள் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தத் தவறினால், மாநகராட்சி ஆணையருக்கு உரிய அதிகாரம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.