📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business November 28, 2026 06:32 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,160க்கும், ஒரு கிராம் ரூ.11,770க்கும் விற்பனையானது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும் மாலையில் ரூ.1,360 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.170 உயர்த்து விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 26ம் தேதி சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.11,540க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.1840 உயர்ந்த நிலையில் இன்று ரூ.400 குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்பொழுது மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.