📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 26, 2026 08:04 AM

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியாவிலிருந்து ராயல் கரீபியன் கப்பல் சேவை தொடக்கம்

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியாவிலிருந்து ராயல் கரீபியன் கப்பல் சேவை தொடக்கம்

கடல் வழியே உல்லாசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், ராயல் கரீபியன் நிறுவனம் தனது ‘வோயேஜர் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பல் சேவையைச் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கவுள்ளது.

2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2028 ஏப்ரல் மாதம் வரை தொடரவுள்ள இப்புதிய பருவத்தில், இரண்டு இரவுகள் கொண்ட குறுகிய காலப் பயணங்கள் முதல் 15 இரவுகள் கொண்ட நீண்டகால பயணங்கள் வரை பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

பயணிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்கிழக்காசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய இடங்களுக்குச் செல்லும் பயணத் திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து புறப்பட்டு நியூசிலாந்தின் மில்ஃபோர்ட் சவுண்ட் வழியே செல்லும் 10 இரவுகள் கொண்ட கிறிஸ்துமஸ் சொகுசுக் கடல் பயணம் வழங்கப்படுகிறது

சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வியட்னாமின் ஹோ சி மின் நகரம் வழியே ஹாங்காங் சென்றடையும் ஐந்து இரவுகள் கொண்ட உல்லாசப் பயணத்தையும் பயணிகள் தேர்ந்தெடுக்கலாம்.

ஹாங்காங்கிலிருந்து ஜப்பானின் இஷிகாகி, ஒகினாவா ஆகிய இடங்களுக்குச் செல்லும் நான்கு முதல் ஐந்து இரவுகள் கொண்ட சீனப் புத்தாண்டுப் பயணத்திட்டம் (ஒகினாவாவில் தங்கும் வசதியும் இதில் அடங்கும்) வழங்கப்படுகிறது.

இக்கப்பலில் சர்ஃப் பாவனைச் சாதனம், நீர்ச்சறுக்குகள், பாறை ஏறும் சுவர், பனிச்சறுக்கு அரங்கு, ஒன்பது குழி சிறு கோல்ஃப் மைதானம் மற்றும் இருட்டில் ஒளிரும் லேசர் டாக் விளையாட்டு எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. உணவகங்களைப் பொறுத்தவரை இத்தாலிய உணவுகள், ஸ்டீக்ஹவுஸ், ஜப்பானிய உணவுகள் மற்றும் விரிவான புஃபே உணவு முறைகளை விருந்தினர்கள் சுவைக்கலாம்.

சிங்கப்பூர், ஹாங்காங், பிரிஸ்பன், சிட்னி ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் இக்கப்பலுக்கான முன்பதிவுகள், ஆகஸ்ட் 26 முதல் ராயல் கரீபியன் இணையத்தளத்தில் தொடங்கியுள்ளன. ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் இந்நிறுவனம் மேற்கொள்ளும் மிகப் பெரிய பருவக்கால நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதன் தொடர்ச்சியாக, வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூரிலிருந்து ஆண்டுமுழுவதும் இயங்கும் ‘நேவிகேட்டர் ஆஃப் த சீஸ்’, பிரிஸ்பனிலிருந்து இயங்கும் புதுப்பிக்கப்பட்ட ‘ஒவேஷன் ஆஃப் த சீஸ்’ மற்றும் சிட்னியிலிருந்து இயங்கும் ‘ஆந்தம் ஆஃப் த சீஸ்’ ஆகிய கப்பல்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மேலும், ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் த சீஸ்’ கப்பல் ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கிலிருந்து ஜப்பான், தென்கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லவுள்ளது.