📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 25, 2026 04:06 AM

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபைத் தேர்தல்

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபைத் தேர்தல்

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் வரலாற்றிலேயே மிக அணுக்கமாகக் கவனிக்கப்பட்டதும் கடுமையான போட்டி நிறைந்ததுமான தேர்தலில், தொழிலதிபர் ராஜகுமார் சந்திரா தலைமையிலான 'டீம் ராஜ்' அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, சபையின் புதிய தலைவராக ராஜகுமார் பொறுப்பேற்கிறார்.

2026-2028 காலகட்டத்திற்கான சபையின் தலைவராக ராஜகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பார்த்திபன் முருகையன், ஜெகதீஷ் பிரசாத் ஜெய்ஸ்வால் இருவரும் துணைத் தலைவர்களாகவும் எஸ்.வெங்கிட பத்மநாபன் கௌரவப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர் டி.மோகன் தலைமையிலான 'ஃபார்வர்ட் லீடர்ஷிப் அலையன்ஸ்' என்ற எதிர்த்தரப்பு அணி, எஞ்சிய மூன்று வாரிய இடங்களைக் கைப்பற்றியது. அந்த அணியிலிருந்து ரஜித் மோகன், ரமேஷ் குமார் ராமசாமி, வீணா சுப்பிரமணியம் ஆகியோர் வாரிய உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.