📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 19, 2026 03:03 AM

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் நவராத்திரி விழா

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் நவராத்திரி விழா

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.மண்டபம்நிறை பக்தர்கள் சூழ 14ஆம் தேதி அன்னை ஸ்ரீ அன்னபூரணியாகவும் 15 ஆம் தேதி ஸ்ரீ மீனாட்சி யாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் தமக்கே உரிய வெண்கலக் குரலில் பாடி விளக்கியது மெய்சிலிர்க்க வைத்தது.வசந்த மண்டபம் அருள் நிறைந்தும் கலா மண்டபம் இசை நிறைந்த நிகழ்வுகளால் மெய் சிலிர்க்க வைத்தன.ஆலய நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்