சூர்யா அப்படிப்பட்டவர்.. அவரது மதிப்பு தெரியும்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அனுபவம் பகிர்ந்த ராதிகா
சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் ராதிகா. ஹீரோயினாக தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்த அவர் இப்போது குணசித்திர நடிகையாக கலக்கிவருகிறார். அவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியானது. படம் மெகா ஹிட்டாகி 150 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசினார் ராதிகா.
பாரதிராஜாவின் அறிமுகமான ராதிகா 80களில் ஹீரோயினாக கலக்கியவர். காலப்போக்கில் அவருக்கான மார்க்கெட் கொஞ்சம் சரிய தொடங்கியதை அடுத்து; தன்னுடைய வண்டியை குணசித்திர நடிகை ரூட்டில் செலுத்தினார். அந்த ஏரியாவிலும் கலக்கினார். இந்த வருடத்தில் மட்டும் அவர் தாய் கிழவி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். தாய் கிழவியில் அவர்தான் லீடு ரோல். படம் மெகா ஹிட். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுக்கு அம்மா ரோல். அந்தப் படமும் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
ராதிகா பேச்சு: இந்நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு சார்பில் இன்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பேசிய ராதிகா, "இப்படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவை கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். படத்தில் சின்ன சின்ன சலிப்பான காட்சிகள் இருந்தால்கூட அதை சுட்டிக்காட்டி, 'இதெல்லாம் என்ன?' என்றுதான் ரசிகர்கள் கேட்பார்கள். ஆனால் இந்தப் படம் விறுவிறுப்பாக இருந்தது. அனைவருமே ரசித்தார்கள். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர்தான்.
அப்படித்தான் கேட்டேன்: இந்தக் கதையை சூர்யாவிடம் சொன்னீர்களா? அவர் நடிக்க ஓகே சொல்லிவிட்டாரா? என்றுதான் முதலில் வெங்கியிடம் கேட்டேன். பல ஹீரோக்களுடன் நான் பணியாற்றியிருப்பதால்; அவர்கள் எல்லாம் எப்படி யோசிப்பார்கள், சிந்தனை முறை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் கேட்டேன். சூர்யா ஓகே சொல்லிவிட்டார் என்று வெங்கி சொன்னார். எப்படி அவர் ஓகே சொன்னார் என்றுதான் கேட்டேன்.
மம்மி என்றுதான் அழைப்பேன்: மமிதா பைஜூவை நான் மம்மி என்றுதான் அழைப்பேன். இந்தப் படத்தில் அந்தப் பெண் கேரக்டர் ரொம்ப முக்கியம். அதற்கான சரியான நடிகையை எப்படி தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் எனவும் கேட்டெனெ. அதற்கு அவர், 'கண்டிப்பாக நான் சரியான ஹீரோயினை கண்டுபிடித்துவிடுவேன்' என்று இயக்குநர் சொன்னார். டியூட் ஷூட்டிங் ஸ்பாட்டில் மமிதாவை சரத் பாராட்டியதன் மூலம் தெரிந்துகொண்டேன். அந்தப் படத்திலேயே நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். மமிதாவை ஃபிக்ஸ் செய்ததும், இந்தப் படத்துக்கு சரியான ஹீரோயினை கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறினேன்.
அதன்பிறகு, படத்தில் அந்தப் பெண் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும், அதற்குச் சரியான நடிகையை எப்படி தேர்வு செய்யப் போகிறீர்கள் என்றும் கேட்டேன். அதற்கு அவர், "கண்டிப்பாக சரியான பெண்ணை கண்டுபிடித்துவிடுவேன்" என்றார். பின்னர், டியூட் படப்பிடிப்பு தளத்தில் சரத்குமார் சார் பாராட்டியதன் மூலம் மமிதா பைஜூ பற்றி தெரிந்துகொண்டேன். ஏற்கனவே டியூட் படத்தில் அவரது நடிப்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோது மமிதா பைஜூதான் கதாநாயகி என்று தெரிந்ததும், "சரி, சரியான பெண்ணை கண்டுபிடித்துவிட்டோம்" என்றேன்.
ரொம்ப அழகாக இருந்தது: மிகச்சிறிய உணர்வுகளைகூட வெங்கி கையாண்ட விதம் அழகாக இருந்தது. அந்த நுணுக்கத்தை அனைவருமே பாராட்டினார்கள். படம் பற்றி பல கருத்துக்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே பாசிட்டிவ்வாக இருக்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்தவர் சூர்யா. சொந்த முயற்சியால்தான் அவர் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். பொதுவெளியில் அதிகம் பேசமாட்டார். அவருக்கு பெரிய நண்பர்கள் வட்டமும் இல்லை. ஆனால் அவரது மதிப்பு அனைவருக்கும் தெரியும். இதில் சூர்யா அற்புதமாக நடித்திருந்தார். அழகாகவும் இருந்தார்" என்றார்.