📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 19, 2026 02:36 AM

திங்கட்கிழமை திவாலான மகுடம்.. 4 நாட்களில் விஷால் படத்துக்கு இத்தனை கோடி தான் வசூலா?.. பாவம் ஜீவா!

திங்கட்கிழமை திவாலான மகுடம்.. 4 நாட்களில் விஷால் படத்துக்கு இத்தனை கோடி தான் வசூலா?.. பாவம் ஜீவா!

சென்னை: ஜீவா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட சகோதரர்கள் இணைந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான மகுடம் படத்தை விஷால் இயக்கி நடித்திருந்தார். அனைத்து வேலைகளையும் நானே செய்யுறேன் பாருங்க என அடம்பிடித்து விஷால் செய்தது எல்லாமே வெள்ளித்திரையில் பாராட்டுக்களை அல்லாமல் ட்ரோல் மெட்டீரியல் ஆகி உள்ளது.

நடித்துக் கொண்டே டைரக்ட் செய்கிறேன் என்றும் ஹீரோயின் அஞ்சலிக்கு நானே ரத்த மேக்கப் போடுகிறேன் என விஷால் பண்ண சேட்டைகளும் பிடிஎஸ் வீடியோக்களாக வெளியாகி படத்துக்கு பலம் சேர்க்காமல் பங்கம் பண்ணி வருகிறது.

திங்கட்கிழமையான நேற்று வெறும் 11 லட்சம் மட்டுமே மகுடம் படம் ஈட்டியுள்ளதாக சாக்னிக் வெளியிட்ட தகவல் சினிமா துறையை ஷாக் ஆக்கியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸுக்கு இந்த படம் பயங்கர நஷ்டம் என்று கூறுகின்றனர்.

சூர்யாவுடன் மோதி தோற்ற விஷால்: சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான நிலையில், அந்த படத்துடன் மோத வேண்டாம் என நயன்தாரா, கவின் நடித்த ஹாய் படம் ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளிப்போனது. பின் வாங்கப் போவதில்லை என சூர்யாவுடன் நேரடியாக களத்தில் குதித்து மோதிய விஷாலுக்கு முதல் நாளில் இருந்தே பலத்த அடி விழுந்தது தான் மிச்சம். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2 நாட்களிலேயே 100 கோடி வசூல் என்றும் 4 நாட்களில் 150 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகுடம் 4 நாள் வசூல்: ஆனால், அதே சமயம் விஷாலின் மகுடம் திரைப்படம் முதல் நாளில் வெறும் 60 லட்சம் ஈட்டிய நிலையில், சுதந்திர தின விடுமுறையான சனிக்கிழமை 68 லட்சம் வசூல் செய்து சற்றே உயர்ந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெறும் 56 லட்சம் மட்டுமே வசூல் செய்து சரிவைத் தொடங்கிய மகுடம் திரைப்படம் திங்கட்கிழமையான நேற்று வெறும் 11 லட்சம் மட்டுமே வசூல் செய்து திவால் ஆகிவிட்டது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 2.22 கோடி கிராஸ் வசூலை மட்டுமே மகுடம் ஈட்டியுள்ளது என்றும் மத கஜ ராஜா ஈட்டிய வசூல் கூட இந்த படத்துக்கு வரவில்லை என்கின்றனர்.