Singapore Tamil
August 19, 2026 08:34 AM
கட்டுமானக் குப்பையை வெளிநாட்டில் அகற்ற அனுமதி கிடையாது: என்இஏ
கட்டுமானக் குப்பை அல்லது கட்டடங்களை இடித்த பிறகு சேரும் குப்பையை வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று அகற்ற சிங்கப்பூர் அனுமதிப்பதில்லை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) தெரிவித்துள்ளது.
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து கொண்டுசெல்லப்படும் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிக்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தின் தொடர்பில் வாரியம் அதனைக் குறிப்பிட்டது. மலேசியாவின் தேசிய கழிவு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அது இவ்வாறு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
Singapore Tamil