📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 29, 2026 08:32 AM

‘சூழலுக்கேற்ப அரசியல் மாற்றம்’

‘சூழலுக்கேற்ப அரசியல் மாற்றம்’

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். படம்: ர. செல்வமுத்துகுமார்

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை குறை சொல்லவோ, மத நல்லிணக்கத்தில் தலையிடவோ கூடாது என்பதுதான் நியாயமான விதி.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்றும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறுகிறார். அப்படியென்றால், அவர் வன்முறையைத் தூண்டிவிடுகிறாரா? வன்முறைக் காடாக மாறும் என்று கூறுபவர்கள் அதற்குத்தயாராகிறார்களா?

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் தவெக எம்எல்ஏவை கடந்த ஜூன் மாதமே கைது செய்யாதது ஏன்? என்பதை தமிழக முதல்வர்தான் கூறவேண்டும். பாஜகவின் பொறியில் திமுக சிக்கிக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதற்கு முன்பு காங்கிரஸிடம் சிக்கி இருந்தார்களே, அதை என்னவென்று சொல்வது? ஒவ்வொரு காலகட்டத்திலும், சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.