📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 29, 2026 08:32 AM

நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

ராசிபுரம்:சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி பகுதியில் வந்தபோது, லாரியின் பின்பக்க டயர் பஞ்சரானது. இதனால் லாரியை, தேசிய நெடுஞ்சாலை ஓரமாக டிரைவர் நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி பெயின்ட் பாரம் ஏற்றிச்சென்ற மற்றொரு லாரி, சாலையோரம் நின்றிருந்த தவிடு லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பெயின்ட் லோடு லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதில் ஈரோட்டை சேர்ந்த டிரைவர் மதன், 40, படுகாயமடைந்து வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

புதுச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த டிரைவர் மதன் பத்திரமாக மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.