DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
DMK Vs TVK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக திமுக தரப்பில் முன்னெடுக்கும் பல அரசியல் அஸ்திரங்களும், எதிர்பாராத திருப்பங்களால் அடுத்தடுத்து தோல்வியை கண்டு வருகிறது.
DMK Vs TVK: அரசுக்கு எதிராக திமுக தரப்பில் அடுத்து எந்த பிரச்னையை முன்னெடுத்தாலும், அதற்கு உடனடியாகவும் தீவிரமாகவும் எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறாதாம்.
திமுக கணிக்காத தேர்தல் தோல்வி
அரசியல் கட்சியை தொடங்கி இனி திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் களத்தில் போட்டியே என சூளுரைத்து தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் களமிறங்கினார். ஆனால், 60 ஆண்டுகளாக மாறி மாறி தமிழ்நாட்டை ஆண்டு வரும் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே தான் போட்டி என, அந்த இரண்டு கட்சிகளும் விஜயை ஒரு பொருட்டாகவே கருதாமல் தேர்தலை எதிர்கொண்டார். திமுக வரலாற்றில் முதல் முறையாக மீண்டும் வென்று, ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுக்க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உதவியுடன் விஜய் முதலமைச்சரானார். இது திமுக முன்னெப்போதும் கண்டிராத ஒரு வரலாற்று தோல்வியாகவே கருதப்படுகிறது.
தாறுமாறாக தவெகவை விமர்சிக்கும் திமுக
அனுபவமில்லாத புதிய ஆட்சி அமைந்தது முதலே, தவெக அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் தினசரி அளவில் தீவிரமாக கண்காணித்து திமுக மிகவும் காட்டமாக விமர்சித்து வருகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆட்சி கவிழக்கூடும் எனவும் கூறி வருகின்றனர். விஜயின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், தவெக மீதான ஊழலற்ற கட்சி என்ற பிம்பத்தையும் உடைக்க பல்வேறு குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் திமுக கையிலெடுத்த சில முக்கிய பிரச்னைகள் எதிர்பாராத திருப்பங்களால் புஸ்வானமாகி மாறிப்போனது அறிவாலயம் தரப்பினரை அப்செட்டாக்கியுள்ளதாம்.
எதிர்பாராத ட்விஸ்டுகள் - அப்செட்டில் திமுக
தவெக அரசின் மீது திமுக அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், ஒரு சில குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளாலும் ஒரு சேர முன்னெடுக்கப்பட்டன. அப்படி எடுத்த முயற்சிகள் நெருக்கடியை ஏற்படுத்தி விஜய்க்கு தலைவலியாக மாறும் சூழலும் ஏற்பட்டது. ஆனால், எதிர்பாராமல் வந்த முடிவுகள் பிரச்னையை கரைந்தோட செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும், நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் சிஜேபி டெல்லியில் போராட்டம் நடத்தியது. அதற்கு ஆதரவாக சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சிலர், நீட்டை ஒழிக்க வேண்டும் என குரலெழுப்ப தொடங்கினர். அதோடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான மோசமான விமர்சனங்களையும் திமுகவினர் முன்வைத்தனர். இந்த விவகாரம் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை நீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய சிஜேபி தரப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தை கைவிட, நீட்டை ஒழிக்க வேண்டும் என களமிறங்கிய திமுக ஆதரவு அமைப்புகளின் போராட்டம் தானாகவே நீர்த்துப்போனது.
இதையும் படியுங்கள்:Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
கவைரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கான நீரை வழங்காதது குறித்து, கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் பரிசீலித்தார். ஆனால், முதலமைச்சர் விஜய் பெங்களூருவிற்கு செல்லக்கூடாது, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட்கள் உட்பட பலரும் விஜய் பெங்களூரு செல்வதை எதிர்த்தனர். இதனால் அரசுக்கான நெருக்கடி அதிகரித்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரை காவிரி நீர் கிடைக்காவிட்டால், அதையே பெரும் பிர்ச்னையாக எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தனவாம். ஆனால், யாரும் எதிபாராத விதமாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கபிணி அணையிலிருந்து நொடிக்கு 25 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதனால் தற்போதைக்கு காவிரி நதி நீர் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. தவெக அரசும் நிம்மதி பெருமூச்சு விடதொடங்கியுள்ளது.
நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது அனுமதி இல்லாமல் சாலைகளை ஆக்கிரமித்து போராடியவர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். நீட்டை ஒழிக்க வேண்டும் என கூறிக்கொண்டு, அதுதொடர்பான போராட்டக்காரர்கள் மீதே தவெக அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதாக திமுக போன்ற காட்சிகள் சாடின. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத விதமாக உரிய அனுமதி பெற்று தாராளமாக போராடலாம் என அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தவெக அரசுக்கு முதல் தலைவலியாக அமைந்ததே மின்வெட்டு பிரச்னை தான். போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிகையால் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தாலும், இன்னும் ஒரு சில இடங்களில் இந்த பிரச்னை தொடர்வதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 3.70 லட்சம் பேருக்கு வழக்கத்தை காட்டிலும் பெரிய அளவில் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 15,323 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில் 100 மின் இணைப்புகளில் அதாவது 0.65 சதவிகிதத்தில் மட்டுமே மின்சார பயன்பாடு பதிவு மற்றும் மின்கட்டணத்தில் வேறுபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே தவறான தகவல்கள் மற்றும் புகார்களை பரப்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி