📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 02, 2026 06:03 AM

“எப்போதும் ஊழல் ஊழல் என பேசுவதா? இப்ப என்ன நாங்க சட்டசபைக்கு வரக்கூடாது என்கிறீர்களா?”

“எப்போதும் ஊழல் ஊழல் என பேசுவதா? இப்ப என்ன நாங்க சட்டசபைக்கு வரக்கூடாது என்கிறீர்களா?”

“எப்போதும் ஊழல் ஊழல் என பேசுவதா? இப்ப என்ன நாங்க சட்டசபைக்கு வரக்கூடாது என்கிறீர்களா?” - எ.வ.வேலு

இடைச்சொற்கள் மாதிரி ‘ஊழல், ஊழல்’ன்னு ஒரு பாட்டு பாடிட்டு இருக்காங்க. எனக்கு ஒன்றும் புரியல! அப்போ எங்களைச் சட்டசபைக்கு வரக்கூடாதுன்னு சொல்றீங்களா? உங்க பேச்சைக் கேட்கக்கூடாது என்கிறீர்களா? என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஆளும் கட்சியினர் எப்போது பேசினாலும் இடை இடையில் கடந்த ஆட்சியில் ஊழல்... ஊழல் என ஒரே பாட்டை பாடுகிறார்கள். இப்ப என்ன நாங்க சட்டசபைக்கு வரக்கூடாது என்கிறீர்களா? உங்கள் பேச்சை கேட்க கூடாது என்கிறீர்களா? இதெல்லாம் நல்லது இல்லை. இடைச்சொற்கள் மாதிரி ‘ஊழல், ஊழல்’ன்னு ஒரு பாட்டு பாடிட்டு இருக்காங்க. எனக்கு ஒன்றும் புரியல!

தினமும் 4, 5 மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. முன்பெல்லாம் 2 மானியக் கோரிக்கைகள் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். தற்போது காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பேரவை நடைபெறுகிறது. பேரவைத் தலைவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், நாங்களும் கட்டுப்பட்டு அமர்ந்திருக்கிறோம் என்றார். மேலும், 4 அல்லது 5 மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் யார் எந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்பதைப் பிரித்துக் கொடுக்கிறார். ஆட்சியின் குறை, நிறைகளை மதிப்பிட ஓராண்டு காலம் தேவைப்படும். எனவே, தற்போது கடந்த 5 ஆண்டுகளைப் பற்றித்தான் பேச முடியும்” என்றார்.