எதிர்நீச்சல் சக்தி உண்மையில் யார்? தந்தையின் கனவை நனவாக்கிய சபரி பிரசாத்தின் திரைப்பயணம்!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ராவணன் மற்றும் சக்திக்கு இடையே நடைபெற்று வரும் மோதல் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த சக்தி, தற்போது ராவணனுக்கு எதிராக களத்தில் இறங்கி அதிரடி காட்டி வருவதால், சீரியலின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதில் சக்தி கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து வருபவர் சபரி பிரசாத். இவரைப்பற்றி ரசிகர்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்
நடிகர் சபரி பிரசாத்: சென்னையில் பிறந்த சபரி பிரசாத்துக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல ஆர்வம் இருந்திருக்கிறது. இவருடைய தந்தைக்கும் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிப்புத் துறைக்கு வர முடியாமல் போனதால், சபரி பெயரிலேயே ஒரு கம்பேனியை தொடங்கினார். தந்தையை போலவே சபரி பிரசாத்துக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே குறும்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துத் தனது நடிப்புத் திறமையை வளர்த்துக்கொண்டார்.
எதிர்நீச்சல் சக்தி: தொடர்ந்து சின்னத்திரையில் வாய்ப்புகளைத் தேடி வந்த போது தான், கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான தறி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களிடம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதன் பிறகு எதிர்நீச்சல் தொடரில் சக்தி கதாபாத்திரத்திற்காக ஆடிஷன் நடைபெற்றுள்ளது. பலரும் இந்த கதாபாத்திரத்திற்காக ஆடிஷனில் கலந்த கொண்ட போது, பல கட்டங்களாக நடந்த ஆடிஷனில் இறுதியில் சபரி பிரசாத் தேர்வு செய்யப்பட்டு சக்தியாக நடித்து வருகிறார்.
காதல் திருமணம்: சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் தடம் பதிக்க வேண்டும் என்பது சபரி பிரசாத்தின் ஆசையாக இருக்கிறது. இவர் டிராகன் படத்தில் சின்ன காட்சியிலும், ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நல்ல கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார். நடிகர் சபரி பிரசாத், கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சபரி பிரசாத்திற்கு திருமணம் நடந்த விஷயமே தெரியாது. இவர் இன்ஸ்டாகிராமில் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பார்த்து பல பெண்கள் என்னது சக்திக்கு கல்யாணம் ஆகிடுச்சா என வருத்தப்பட்டன. அதே நேரம் சீரியலில் ஜனனிக்கும் சக்திக்கும் இடையே கெமிஸ்ட்ரி பக்கவாக இருக்கும் ரசிகர்கள் இவர்களை கொண்டாடி வருகின்றனர்.
மாஸ் காட்டும் சக்தி: ஆரம்பத்தில் குடும்பப் பிரச்சனைகளுக்குள் சிக்கியிருந்த சக்தி மிகவும் அமைதியானவராக இருந்தார். தற்போது கதையின் போக்கு மாறியதால் ராவணனுக்கு எதிராக நிற்கும் முக்கியமான கதாபாத்திரமாக மாறியிருக்கிறார். குறிப்பாக ராவணனுக்கும் சக்திக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் காட்சிகளில் சபரி பிரசாத்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் ராவணன் மிரட்ட, அவரை அழிக்க சக்தி களமிறங்கியிருப்பது போல கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இனி ராவணனுக்கும் சக்திக்கும் இடையிலான மோதல் எந்த அளவுக்கு செல்லப்போகிறது என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.