GOLD PRICE TODAY : அதிரடி சரிவில் தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,420, ஒரு சவரன் ரூ.91,360 ஆகவும், வெள்ளி ஒரு கிராம் ரூ.165, ஒரு கிலோ ரூ.1,65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிந்து வந்தது. கடந்த 14-ந்தேதி தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,615, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 920 ஆக இருந்தது.
அதன்பிறகு கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை வேகமாக குறைந்து வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.
அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,470 ஆகவும், ஒரு சவரன் ரூ.99760 ஆகவும் இருந்தது. பின்னர் தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை நேற்று முந்தினம் ஒரு கிராம் ரூ.11,465 ஆகவும், ஒரு சவரன் ரூ.91,720 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 135-ம், ஒரு சவரன் ரூ.1080-ம் உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 11,600, ஒரு சவரன் தங்கம் ரூ.92,800-க்கும் விற்பனை ஆனது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரிப்பு
நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.115-ம், ஒரு சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 11,715, ஒரு சவரன் தங்கம் ரூ.93,720 ஆக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.250-ம், ஒரு சவரன் தங்கம் ரூ.2 ஆயிரமும் அதிகரித்தது.
அதிரடி விலை சரிவில் தங்கம்
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 420 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 91 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை குறைவு
தங்கத்தை போலவை வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளதால் தங்கம், வெள்ளி வாங்கும் ஆர்வத்தில் உள்ளவர்கள் இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்
24-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,720
23-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
22-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720
21-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720
20-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்
24-11-2026- ஒரு கிராம் ரூ.175
23-11-2026- ஒரு கிராம் ரூ.175
22-11-2026- ஒரு கிராம் ரூ.175
21-11-2026- ஒரு கிராம் ரூ.175
20-11-2026- ஒரு கிராம் ரூ.175