📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 02, 2026 03:04 PM

GSLV

GSLV

புதுடில்லி: இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ராக்கெட் மூலம் செப்.4ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. GSLV-F17 ராக்கெட் விண்ணில் ஏவுதலுக்கான கவுண்டவுன் இன்று முதல் துவங்குவதை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் விஞ்ஞானிகள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் இந்த திட்டத்திற்கான மாதிரி ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில், விஞ்ஞானிகளுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜிசாட்-1ஏ என்பது இஸ்ரோ தயாரித்துள்ள ஒரு அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். தற்போது EOS-05 என்ற மேம்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. ந்த செயற்கைக்கோள், செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 2:55 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிபிடத்தக்கது.