📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 02, 2026 05:05 PM

சிங்கப்பூர் செல்வந்தரின் வங்கிக் கணக்குகளை முடக்கிய பங்ளாதேஷ்

சிங்கப்பூர் செல்வந்தரின் வங்கிக் கணக்குகளை முடக்கிய பங்ளாதேஷ்

வர்த்தகப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில், சிங்கப்பூர் செல்வந்தர் முகமது அஜீஸ் கானின் வங்கிக் கணக்குகளை பங்ளாதேஷ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

பணமோசடி செய்ததன் தொடர்பில் குற்றச்சாட்டுகளால் பங்ளாதேஷில் இருந்த திரு கான், அவரது குடும்பத்தினரின் நிலங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன,

எனினும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த புகார்களை தொழிலதிபர் கான் மறுத்துள்ளர்.

ஊழல் தடுப்பு ஆணையம், பங்ளாதேஷ் பத்திரங்கள், பரிவர்த்தனை ஆணையம், கூட்டுப் பங்கு நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் பதிவாளர், வருமான வரி அதிகாரிகள் தம்மைத் தொடர்பு கொண்டதாக திரு. கான் உறுதிப்படுத்தினார் .

“பங்ளாதேஷ் அரசாங்கத்தின் அனைத்து விசாரணைக்கும் நாங்கள் என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்திட எங்கள் தரப்பினர் ஒத்துழைக்கிறார்கள். இவ்விவகாரத்தில் நாங்கள் குற்றமற்றவர்களாக வருவோம்,” என்று திரு. கான் மேலும் கூறினார்.

தற்போது வரை, பங்ளாதேஷில் தமக்கும் தம் நிறுவனங்களுக்கும் எதிராக எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் சொன்னார்.

பங்ளாதேஷில் சிவில் விமானப் போக்குவரத்து, சுற்றுலா அமைச்சராக இருந்த திரு. கானின் சகோதரர், 2024 ஆம் ஆண்டு அரசியல் ஆர்வலரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்காக சிறையில் உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

திரு. கான், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் 2025ஆம் ஆண்டிற்கான பட்டியலில் சிங்கப்பூரின் 49வது பணக்காரராக இடம்பெற்றிருந்தார். அவரது சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (1.42 பில்லியன் வெள்ளி).