கும்பாபிஷேகத்தில் வெடித்த புதுபிரச்சனை.. சாமுண்டீஸ்வரிக்கு சந்திரகலா போட்டுக் கொடுத்த ரகசியம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் ரோகினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தை சிவனாண்டி சந்திரகலாவிற்கு போன் செய்து, ரோகினிக்கு கார்த்தி வீட்டில் வளைகாப்பு நடக்கிறது என்கிறார். இதைக்கேட்டு ஆத்திரம் அடையும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரி நேராக அந்த இடத்திற்கு அழைத்து வருகிறாள். கார்த்திக் இந்த ஏற்பாட்டை தான்தான் செய்ததாக கூற முயற்சிக்கும்போது, ரோகினி அவரை தடுத்து நிறுத்தி, நாங்களே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தோம் என்று கூறி சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்தி அனுப்புகிறாள்.
கார்த்திகை தீபம்: அதனைத்தொடர்ந்து, ரோகிணி மற்றும் மயில்வாகனம் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது, மயில்வாகனம் பல வருஷத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்க, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில், அவள் ஆசைப்படுவதை நிறைவேற்றுவது ஒரு கணவனின் கடமை. அவ தங்கை ரேவதியை பார்க்க வேண்டும், ரேவதி கையால் வளையல் போட வேண்டும் என ஆசைப்படும் போது நான் அதை எப்படி வேண்டம் என்று சொல்ல முடியும் அத்தை, அதனால்தான் அவளை கார்த்திக் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன் என்று மயில்வாகனம் சொல்கிறார். மேலும் ரோகிணி அம்மா ரேவதி என் தங்கச்சி, என் குழந்தைக்கு சித்தி அவ இல்லாம இந்த வளையாப்பு நடப்பது எனக்கு பிடிக்கவில்லை அதான் நான் போனேன் என்று சாமுண்டீஸ்வரியிடம் தைரியமாக சொல்கிறாள்.
மகிழ்ச்சியில் ரேவதி: மறுபுறம், ரேவதி தனது விருப்பப்பட்டபடி வளைகாப்பு நடத்தி வைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்து கார்த்திக்கிற்கு நன்றி சொல்கிறாள். அக்காவிற்கு வளையால் போட முடியாதோனு நினைச்சி வருத்தப்பட்டேன் மாமா, ஆனால், நீங்க என் ஆசையை புரிஞ்சிக்கிட்டீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் மாமா என்கிறார். மேலும் அம்மா சீக்கிரம் மனுசு மாறி அவங்க கையால் தாலியை எடுத்து கொடுக்கணும், அப்போத்தான் நாமும் குழந்தை பெத்துக்க முடியும் என்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள். இதைக் கேட்ட பரமேஸ்வரி பாட்டி, கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் பத்து குழந்தை பெத்துக்கோ எல்லாம் நல்லபடியாக நடைபெறும் என்று வாழ்த்துகிறார்.
சாமுண்டீஸ்வரியின் முடிவு: பின்னர், கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசும்போது, நான்கு எல்லைகளிலும் கருப்பசாமி விளக்கு ஏற்றுவதற்கு ராஜராஜன் வர வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கு கார்த்திக், "மாமாவை நானே அழைத்து வருகிறேன்" என்று உறுதியளிக்கிறான். ஆனால் இந்த தகவல் சந்திரகலா மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே கார்த்திக் மீது கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி, "எக்காரணம் கொண்டும் ராஜராஜனை அங்கு அனுப்ப மாட்டேன்" என்று உறுதியான முடிவை எடுக்கிறாள். இதனால் கார்த்திக் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? சாமுண்டீஸ்வரியின் முடிவு அடுத்ததாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறவிடாமல் காணுங்கள்.