📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 29, 2026 12:01 PM

Hi Box Office: நயன்தாராவோட டாக்ஸிக் முதல் நாளில் 150 கோடி.. ஹாய் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Hi Box Office: நயன்தாராவோட டாக்ஸிக் முதல் நாளில் 150 கோடி.. ஹாய் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஒரு படம் கூட தியேட்டர்களில் வெளியாகவே இல்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டெஸ்ட் எனும் ஒரே ஒரு படம் வெளியானது. ஆனால், ஓடிடியிலும் அந்த படம் பெரிதாக வெற்றிப் பெறவில்லை.

ஆனால், இந்த ஆண்டு மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் நடித்த பேட்ரியாட் படம், கன்னடத்தில் உருவாகி பான் இந்திய படமாக வெளியாகி உள்ள டாக்ஸிக் மற்றும் தமிழ் படமான ஹாய் என ஹாட்ரிக் ரிலீஸ் செய்துள்ளார்.

அதுவும் இந்த வாரத்திலேயே பேக் டு பேக் 2 படங்கள் நயன்தாராவுக்கு வெளியாகி இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

நெகட்டிவ் டு பாசிட்டிவ்: டாக்ஸிக் படத்தை பார்த்த ரசிகர்களும் விமர்சகர்களும் அந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில், ஹாய் படத்தை பார்த்து விட்டு இந்த படம் ஃபீல் குட் ஆகவும், காமெடி கலந்த கலகலப்பான படமாகவும் உள்ளதே என பாராட்டி வருகின்றனர். யஷ்ஷுக்கு அக்காவாக நடித்த நயன்தாரா கவினுக்கு ஜோடியாக நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் வயது வித்தியாசம் கொண்ட கதையாக இருக்குமோ என நினைத்த நிலையில், அது இல்லை என்பதே இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்த மாதம் வெளியான சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வயது வித்தியாச கதையாக இருந்த நிலையில், கவின் படமும் அப்படி இருந்தால் கவிழ்ந்திருக்கும் என்கின்றனர்.

டாக்ஸிக் முதல் நாள் வசூல்: உலகளவில் டாக்ஸிக் திரைப்படம் முதல் நாளில் 150 கோடி வசூல் என கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. புதன் கிழமையே டாக்ஸிக் படம் வெளியான நிலையில், 3 நாட்களில் 221 கோடி வசூலை கடந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று நயன்தாரா - கவின் நடிப்பில் வெளியான ஹாய் படம் எந்தளவுக்கு வசூல் செய்துள்ளது என பாரத்த ரசிகர்களுக்கு செம ஷாக்கே கிடைத்துள்ளது.

வெறும் 1 கோடி வசூல்: விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா, பாக்யராஜ், ராதிகா, பிரபு, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாய் திரைப்படம் முதல் நாளில் வெறும் 1.25 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே கவின் நடிப்பில் கடைசியாக வெளியான பிளடி பெக்கர், கிஸ் மற்றும் மாஸ்க் படங்களின் படு தோல்வி தான் என்கின்றனர். ஹாய் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிறு வசூல் அதிகரிக்கும் என்கின்றனர். என்ன ஆகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். கடைசியாக கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் 20 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஹாய் அதை கடக்குமா? என்பதை பார்க்க ஆவலுடன் கவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.