📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 29, 2026 12:04 PM

இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு : வார்த்தையை விட்ட TVK MLA... கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்!

இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு : வார்த்தையை விட்ட TVK MLA... கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்!

இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு : வார்த்தையை விட்ட TVK MLA... கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களை சீரழிக்கும் இடம் என தவெக எம்.எல்.ஏ கருப்பையா விமர்சித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு செலவிட்ட ரூ.50 கோடியை மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க பயன்படுத்தியிருக்கலாம் என அவர் கூறியதற்கு, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா தனது தொகுதி தொடர்பாக பேசினார்.

அப்போது, அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டு இருக்கிறது என்றும், ரூ.50 கோடி நிதி இருந்திருந்தால் அந்த சர்க்கரை ஆலையை திறந்து இருக்கலாம், இளைஞர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக, சர்க்கரை ஆலைக்கு கொடுத்து இருக்கலாம் என்றும் கூறினார்.

அதற்கு பதிலளித்த திமுக கொறடா எ.வ.வேலு, மதுரை பகுதியில் தமிழர்களின், குறிப்பாக இளைஞர்களின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு அரங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது என்றும், அதன்படி ஜல்லிக்கட்டுக்கு என்று ஒரு அரங்கம் அமைக்கப்பட்டது என்றும் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நிர்மல்குமார், ஜல்லிக்கட்டு என்ன Gladiator போட்டியா? ஊருக்கு வெளியே கட்டிய மைதானத்தால் பிரயோஜனம் இல்லை என்றும், ஊர்மக்கள் ஒன்று கூடி அங்கேயே நடத்துவது தான் ஜல்லிக்கட்டு போட்டி என்றும் கூறினார்.

சட்டப்பேரவையில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கிறது என்று கூறிய தவெக எம்.எல்.ஏ.வின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து விமர்சித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா?, இதுதான் தவெகவின் நிலைப்பாடா என்று விமர்சத்துள்ளர்.

அதே போல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா? என்றும், சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய், ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது? என்றும் விமர்சித்துள்ளார்.