இமானுவேல் சேகரன் நினைவு நாள்: கனிமொழி, நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளப் பதிவு
இமானுவேல் சேகரன் நினைவு நாள்: கனிமொழி, நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளப் பதிவு
சென்னை: சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி திமுக எம்.பி கனிமொழி, பாஜக மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பாஜக மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று!
சமத்துவம், சுயமரியாதை மற்றும் மனித உரிமைகள் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் வாழ்ந்த இமானுவேல் சேகரன் அவர்கள், தனது இளம் வயதிலேயே சமூக மாற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர். அவரது போராட்டமும் தியாகமும் சமூக நீதிக்கான பயணத்தில் என்றும் அழியாத தடமாகத் திகழ்கிறது. அவரது நினைவு நாளில், சாதி வேறுபாடுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கும் வலிமையான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.