📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 11, 2026 12:33 PM

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!'

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!'

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!' - முழு தகவல்

வி.எஸ்.பாபுவின் உடல்நலக்குறைவை அறிந்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் விஜய் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்திருக்கிறார்.

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

மருத்துவமனை தரப்பில் கூறியதாவது, 'செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சுவாசப் பிரச்னை காரணமாக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை இப்போது சீராக இருக்கிறது' எனக் கூறப்பட்டிருக்கிறது.

'கொளத்தூரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கிட்டத்தட்ட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ்.பாபு தோற்கடித்திருந்தார். சிட்டிங் சி.எம் யையே தோற்கடித்ததால் தனக்கு முக்கியமான அமைச்சர் பதவி கிடைக்குமென பாபு நினைத்தார். ஆனால், தலைமை அவரை சட்டை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.