📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 29, 2026 07:32 AM

IND vs NZ: 150

IND vs NZ: 150

IND vs NZ: 150-ல் முடிய வேண்டிய இந்தியா இன்னிங்ஸ்.. காப்பாற்றிய ஜூரெல் - ஆகாஷ் தீப் ஜோடி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மிக மோசமான பேட்டிங் சரிவில் இருந்து தப்பியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை நிலைகுலைந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். படிக்கல் 21, சுப்மன் கில் 17, ரிஷப் பண்ட் 23, கே.எல். ராகுல் 25 ரன்களில் நடையைக் கட்டினர்.

வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களிலும், அன்ஷுல் கம்போஜ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 117 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. மேலும் இந்திய அணி 150 ரன்களுக்குள் சுருண்டு விடும் என்ற நிலை உருவானது. அந்த இக்கட்டான நேரத்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலுடன் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஜோடி சேர்ந்தார். பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்த ஆகாஷ் தீப், பேட்டிங்கிலும் தைரியமாக ஆடினார். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தது. ஆகாஷ் தீப் 52 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 150 ரன்களைக் கடந்தது.

ஆகாஷ் தீப் வெளியேறிய பிறகும் ஜூரெல் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் நிதானமாக ஆடி 100 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு அறிமுக வீரர் குர்னூர் பிரார் நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

3ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பிறகு, இந்தியா 76 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து இருந்தது. ஜூரெல் 65 ரன்களுடனும், பிரார் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 150 ரன்களுக்குள் முடிய வேண்டிய இன்னிங்ஸை ஜூரெல் மற்றும் ஆகாஷ் தீப் தங்கள் அபார போராட்டத்தால் மீட்டெடுத்தனர்.