📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 28, 2026 08:31 AM

IND vs NZ: பும்ரா கூட செய்யாத சாதனையை படைத்த ஆகாஷ் தீப்.. 356 ரன்களுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு

IND vs NZ: பும்ரா கூட செய்யாத சாதனையை படைத்த ஆகாஷ் தீப்.. 356 ரன்களுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு

IND vs NZ: பும்ரா கூட செய்யாத சாதனையை படைத்த ஆகாஷ் தீப்.. 356 ரன்களுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 31.3 ஓவர்களில் 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் நாளில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாம் நாளில் 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்.

இதன் மூலம் நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆகாஷ் தீப் படைத்துள்ளார்.இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதற்கு முன் மதன் லால், ஜவஹல் ஸ்ரீநாத், ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். ஜாகீர் கான் நியூசிலாந்தில் 4 முறையும், இஷாந்த் சர்மா 3 முறையும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதேவேளையில் மதன் லால், ஸ்ரீநாத் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா ஒரு முறை இச்சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

நியூசிலாந்தில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு சாதனையை இஷாந்த் சர்மா வைத்துள்ளார். பிப்ரவரி 2014-இல் வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அவர் 17 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்தில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளரின் ஒட்டுமொத்த சிறந்த பந்துவீச்சு சாதனையை எராபள்ளி பிரசன்னா வைத்துள்ளார். ஜனவரி 1976-இல் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், அவர் 23 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆகாஷ் தீப் கைப்பற்றும் இரண்டாவது 5-விக்கெட் ஹால் இதுவாகும். இதற்கு முன், ஜூலை 2, 2025 அன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 21.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருந்தார்.