📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 28, 2026 08:31 AM

IND vs NZ: ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டான ஜெய்ஸ்வால்.. படிக்கல்லும் ஆட்டமிழப்பு.. இந்தியா தடுமாற்றம்

IND vs NZ: ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டான ஜெய்ஸ்வால்.. படிக்கல்லும் ஆட்டமிழப்பு.. இந்தியா தடுமாற்றம்

IND vs NZ: ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டான ஜெய்ஸ்வால்.. படிக்கல்லும் ஆட்டமிழப்பு.. இந்தியா தடுமாற்றம்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டப் அவுட்டாகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

246 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி தொடங்கியது. ஆரம்பத்திலேயே அன்ஷுல் கம்போஜ் கிளென் ஃபிலிப்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆகாஷ் தீப், நாதன் ஸ்மித் மற்றும் கைல் ஜாமிசன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் தரப்பில் டாம் பிளண்டல் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தார்.

நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் ஹென்றி பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார். தேவ்தத் படிக்கல் 21 ரன்கள் எடுத்திருந்தபோது கைல் ஜாமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது கே.எல். ராகுல் 15 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 12.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 எரன்கள் எடுத்துள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக படிக்கல் சிறந்த பார்மில் இருந்தார். பயிற்சி ஆட்டத்தில் ஒரு இன்னிங்சில் 199 ரன்கள் குவித்து அசத்திய அவர், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 80 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், 2வது டெஸ்டில் அதிரடி காட்டிய அவர் 1 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் தற்போது அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் சுப்மன் கில் மற்றும் ராகுல் ஈடுபட்டுள்ளனர். ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், வாசிங்டன் சுந்தர் மற்றும் அன்சூல் காம்போஜ் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.