📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 23, 2026 01:03 PM

IND vs SL: இலங்கை தோல்விக்கு ஐசிசியை குறை சொன்ன வாஸ்.. இல்லனா மட்டும் என ரசிகர்கள் கிண்டல்

IND vs SL: இலங்கை தோல்விக்கு ஐசிசியை குறை சொன்ன வாஸ்.. இல்லனா மட்டும் என ரசிகர்கள் கிண்டல்

IND vs SL: இலங்கை தோல்விக்கு ஐசிசியை குறை சொன்ன வாஸ்.. இல்லனா மட்டும் என ரசிகர்கள் கிண்டல்

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுகிழமை தொங்குகிறது. இந்த நிலையில்,இந்திய அணி குறித்து பேசிய இலங்கை ஜாம்பவான் வாஸ், இந்திய அணி ஒரு மிகச்சிறந்த அணி என்று பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "எந்த நேரத்திலும் எந்தவொரு வீரருக்கும் மாற்றாக மற்றொரு வீரரை களமிறக்கும் திறன் அவர்களிடம் உள்ளது."

"அவர்கள் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கி, தனது வீரர்களை மிகச்சிறப்பாக கவனித்து வருகிறது."

"காலே டெஸ்ட் போட்டியை நீங்கள் பார்த்தால், அவர்கள் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினர். இந்திய அணி மூன்று சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கியது, அவர்களுக்கு எதிராக ஆடுகளத்தில் நிலைத்து நிற்பது எளிதானதாக இருக்கவில்லை. எங்கள் வீரர்கள் நல்ல போராட்டத்தை அளித்தனர். இரண்டாவது டெஸ்ட் போட்டி மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும், கூடுதல் டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் வீரர்களுக்குப் போதிய பலனை அளிப்பதில்லை, அவர்களுக்கு சர்வதேச அளவில் அதிக ரெட்-பால் போட்டிகள் தேவை," என்று அவர் கூறினார்.

"டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையிலும் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் வேறு சில வீரர்களால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட முடியும். எனவே, நாம் அத்தகைய வீரர்களை அடையாளம் காண வேண்டும். மேலும் வீரர்கள் தாங்கள் எந்த வகை கிரிக்கெட்டில் விளையாடப் போகிறோம், எதில் வசதியாக உணர்கிறோம் என்பதை உணர வேண்டும்."

"ஆனால் என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான திறமைக்கானது. மைதானத்தில் விளையாட உங்களுக்கு அந்தத் திறமை தேவை. எனவே அவர்கள் எந்த வடிவத்தை தேர்வு செய்தாலும், சரியானதைச் செய்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார். இதனிடைய வாஸின் இந்த கருத்து, ரசிகர்கள் மத்தியில் கேலி, கிண்டலை உருவாக்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகைக்கு பின், ஒவ்வொரு அணியும் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு விளையாடுவதாகவும், அப்படி ஐசிசி அதிக அளவு டெஸ்ட் போட்டியை ஒதுக்கினாலும், இலங்கை ஏதேனும் சாதிக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.