Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனாவா இது?.. ஸ்டைலான உடையில் வெளியான வீடியோ.. நடந்தது என்ன?
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனாவா இது?.. ஸ்டைலான உடையில் வெளியான வீடியோ.. நடந்தது என்ன?
எங்கள் கொள்கைகள், நிர்வாகம் அல்லது செயல்பாடுகள் குறித்து எங்களை எதிர்கொள்ள முடியாதபோது, அவர்கள் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகளைப் பரப்பத் தொடங்குகிறார்கள்.
தான் ஸ்டைலான உடையணிந்து காரில் இருந்து இறங்குவதாக வெளியான வீடியோவுக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் காட்டமாக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
விருதை மகள் என அன்போடு அனைவராலும் அறியப்படுபவர் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. சிவகாசி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இன்று அமைச்சராகவும் செயலாற்றி வருகிறது. பதவியேற்ற நாள் முதல் கீர்த்தனாவை பற்றி வெளியாகாத விமர்சனங்கள் இல்லை. அவரின் நடை, உடை, பேச்சு என அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், கேலி கிண்டலுக்குள்ளாகியும் வருகிறது. எனினும் இதனையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை என பல முறை கீர்த்தனா தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் விஜய் சொல்வது போல செயலில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார்.
வைரலான வீடியோ
இந்த நிலையில் கார் ஒன்றில் இருந்து ஸ்டைலான உடையணிந்து ஒரு பெண் இறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தான் என பலரும் பரப்பி வருகின்றனர். இதனை அவர் மறுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு நீண்ட பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தொழில் அமைச்சர் 💐 pic.twitter.com/iRAe0o1iVr
அதில், ”ஒரு பெண் தனது அன்றாட வாழ்க்கையை இயல்பாகக் கழிக்கும் வீடியோ ஒன்று அரசியல் ரீதியான கடும் சர்ச்சைகளை உருவாக்குகிறது என்பது, அதற்குப் பின்னாலுள்ள பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. பெண்களுக்கு எதிராகக் கடுமையான அவதூறான கருத்துகளைக் கூறுவதையே வழக்கமாகக் கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்: அந்த வீடியோவில் இருப்பவர் நான் அல்ல. ஆனால் ஒருவேளை அது நானாகவே இருந்திருந்தாலும், அதனால் என்ன ஆகிவிடப் போகிறது? ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய அல்லது விசாரணைக்குரிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன?
மேலும், வெறும் தோற்ற ஒற்றுமைக்காக இதில் தேவையற்ற முறையில் இழுக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்; உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து வாழுங்கள் என்று நான் விரும்புகிறேன், உங்கள் தலைமுடியின் 'ஹைலைட்ஸ்' (highlights) மிகவும் அருமையாக இருக்கிறது என கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி