📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 28, 2026 12:04 PM

IND vs SL: படிக்கல், மானவ் சுதர்.. இந்த இந்திய வீரர் தான் இலங்கை தொடரில் பெரிய பாசிட்டிவ்

IND vs SL: படிக்கல், மானவ் சுதர்.. இந்த இந்திய வீரர் தான் இலங்கை தொடரில் பெரிய பாசிட்டிவ்

IND vs SL: படிக்கல், மானவ் சுதர்.. இந்த இந்திய வீரர் தான் இலங்கை தொடரில் பெரிய பாசிட்டிவ்- அஸ்வின்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயமாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை மூத்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்துள்ளார். இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் 24.57 சராசரியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும், வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.

தொடர் தொடங்குவதற்கு முன்பே, குர்னூர் பிராருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் பிரசித் கிருஷ்ணாவைத் தேர்ந்தெடுத்த கேப்டன் சுப்மன் கில், அவரது பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டினார். முதலாவது டெஸ்ட் போட்டியில் சோனல் தினுஷா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோருக்கு இடையேயான முக்கியமான பார்ட்னர்ஷிப்பை பிரசித் உடைத்தார்.

மேலும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஷார்ட்-பிட்ச் பந்துகளையும் அவர் சிறப்பாகப் பயன்படுத்தினார். இது குறித்து பேசிய அஸ்வின், "நான் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமிலிருந்து யோசித்தால், இந்தத் தொடரில் எனக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயமாக பிரசித் கிருஷ்ணா மட்டுமே தெரிவார். அதன் பிறகு முதலாவது டெஸ்டில் மானவ் சுதரின் செயல்பாடு இரண்டாவது பெரிய பாசிட்டிவ் விஷயமாக இருக்கும். பல வழிகளில் நீங்கள் துருவ் ஜூரலையும் இதில் சேர்க்கலாம்."

"ஆனால், பிரசித் கிருஷ்ணா உள்ளே வந்த விதம் மற்றும் இந்த டெஸ்ட் தொடரில் தன்னை வெளிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆசியக் கண்டத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இது ஒரு கடினமான சவால், அதை அவர் மிகச் சிறப்பாகச் செய்தார்," என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

"நியூசிலாந்தில் இந்திய அணியின் 3-வது வரிசை பேட்ஸ்மேனாக தேவ்தத் படிக்கல் தான் களம் இறங்க வேண்டும். அவரால வேற என்ன செய்ய முடியும்? அவர் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் ரன்களை குவித்துள்ளார், தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார். சொல்லப்போனால், அவர் இப்போது சாய் சுதர்சனை விட முன்னிலையில் இருக்கிறார். சாய் சுதர்சன் தகுதியுடன் இருந்திருந்தாலும், தேவ்தத்துக்கு த்தான் முன்னுரிமை கிடைத்திருக்க வேண்டும். அவர் இப்போது 3-வது இடத்திற்கான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்."

"எனது கவலை என்னவென்றால், அவர் இலங்கையில் 2 சதங்களை அடித்துள்ளார் என்பதற்காக, நியூசிலாந்தில் ஒரு ஆட்டத்தில் அவுட் ஆன உடனே அவரை மதிப்பிடக் கூடாது," என்று அஸ்வின் கூறினார்.இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உட்பட முழுமையான தொடருக்காக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 19 முதல் டிசம்பர் 1 வரை வெலிங்டன் மற்றும் கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன.