📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 12, 2026 03:03 PM

IND vs WI: 26 வயது வீரரின் பவுலிங்கால் இந்தியாவுக்கு பெரிய சாதகம்.. அஸ்வின் பாராட்டு

IND vs WI: 26 வயது வீரரின் பவுலிங்கால் இந்தியாவுக்கு பெரிய சாதகம்.. அஸ்வின் பாராட்டு

IND vs WI: 26 வயது வீரரின் பவுலிங்கால் இந்தியாவுக்கு பெரிய சாதகம்.. அஸ்வின் பாராட்டு

மும்பை: 26 வயதான இளம் ஆல்ரவுண்டர் நமன் தீரின் பந்துவீச்சு முன்னேற்றத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இந்தூரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 ஃபோர்களுடன் 69 ரன்கள் குவித்தார். இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசிய நமன் தீர், 39 ரன்கள் விட்டுக்கொடுத்து கமீல் பூரன் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மையர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தமது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய அஸ்வின், நமன் தீர் இந்திய அணிக்கு மற்றொரு ஆஃப்-ஸ்பின் ஆல்ரவுண்டர் வாய்ப்பாக உருவெடுத்து வருவதாகத் தெரிவித்தார். "அவர் வழக்கமான முன்னணி ஆஃப்-ஸ்பின்னர் அல்ல. ஆனால், அவரது பந்துவீச்சில் கணிசமான முன்னேற்றம் காணப்படுகிறது. பயமின்றி பந்துவீசுகிறார்.

இந்தியாவிற்கு மற்றொரு ஆஃப்-ஸ்பின் ஆல்ரவுண்டர் தேர்வாக அவர் உருவாகி வருகிறார். போட்டியில் சற்றே கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், ஷிம்ரோன் ஹெட்மையரின் விக்கெட்டை அவர் வீழ்த்தியது மிக முக்கியமான திருப்புமுனையாகும். பந்துவீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், கற்றுக்கொள்ளவும் அவர் தயாராக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார்" என்று அஸ்வின் கூறினார்.

"இந்தூர் மைதானத்தில் பந்துவீச்சாளரின் ஓடுதளப் பகுதி சற்று தாழ்வாகவும், பிட்ச் உயர்த்தப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கும். இத்தகைய சூழலில் கால்கள் தரையில் பதியும் நேரம் மாறுபடுவதால், பந்து சற்றே ஃபுல்லராகச் செல்ல வாய்ப்புள்ளது. பல்வேறு சூழ்நிலைகளில் பந்துவீசும்போது அவர் இயல்பாகவே பல விஷயங்களைக் கற்றுக் கொள்வார். முக்கியமாக, கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் உள்ளது" என்று அஸ்வின் குறிப்பிட்டார்.

நமன் தீர் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 10.55 எகானமி ரேட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரது சிறந்த பந்துவீச்சாகும்.நமன் தீர் அடுத்து அக்டோபர் 14, புதன்கிழமை அன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நான்காவது டி20 போட்டியில் களமிறங்குவார்.