📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 22, 2026 09:04 PM

இந்த வாரம் 200 கோடி போஸ்டர் வருமா?.. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் டல்லடிக்க என்ன காரணம்?

இந்த வாரம் 200 கோடி போஸ்டர் வருமா?.. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் டல்லடிக்க என்ன காரணம்?

சென்னை: கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் கர்ஜித்த அளவுக்கு சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மெகா வசூல் வேட்டையை நிகழ்த்தவில்லையே ஏன் என்கிற கேள்வி கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் எழுந்துள்ளது.

சூர்யாவுக்கு எல்லாம் இனிமேல் 300 கோடி வசூல் எல்லாம் ஜுஜுபி என சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் சொல்லும் போதே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்தன. இனிமேல் சூர்யா, 300 கோடி வசூலை தாண்டி 400 கோடி, 500 கோடி என செல்வார் என்றார்.

4 நாட்களிலேயே கருப்பு திரைப்படம் வெளியாகி 150 கோடி வசூலை உலகளவில் ஈட்டியதாக படக்குழு போஸ்டரையும் வெளியிட்டு ஹீரோவையும் இயக்குநரையும் ஹேப்பி ஆக்கியது. இந்நிலையில், 8 நாட்களை கடந்த நிலையில், 200 கோடி ரூபாய் வசூலை படம் கடந்ததாக இந்த வார இறுதியில் போஸ்டர் வருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கை கொடுத்த கருப்பசாமி: சுமார் 13 ஆண்டுகளுக்கு மேல் சூர்யாவுக்கு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கிடைக்கவில்லை என அவரது அன்பான ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்த நிலையில், கங்குவா கொடுக்காத வெற்றியை கருப்பசாமி இந்த ஆண்டு கொடுத்து சூர்யாவை தி ஒன் ஆக பாக்ஸ் ஆபீஸில் மாற்றியது. ஜன நாயகன் படம் கூட தமிழ்நாட்டில் கருப்பு வசூலை முந்தவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அஜித் குமார் இதுவரை எட்ட முடியாத 300 கோடி வசூலை சிவகார்த்திகேயனுக்குப் பிறகு சூர்யா எட்டிப் பிடித்துள்ளார்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் டல்லடிக்க என்ன காரணம்?: கருப்பு படத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியானது. அந்த படத்துடன் வெளியான விஷாலின் மகுடம் அட்டு ஃப்ளாப் ஆகிவிட்டது. ஆனால், சூர்யா படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்த நிலையில், 4 நாட்களில் 150 கோடி வசூல் என படக்குழுவும் போஸ்டர் வெளியிட்டது. ஆனால், பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கணிப்பின் படி 8 நாட்கள் ஆகியும் இன்னமும் 149 கோடி ரூபாய் தான் வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் ஹிட் அடித்தாலும், பெரிய வசூல் வேட்டையை ஏன் தவற விட்டது என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

தெலுங்கு இயக்குநர்: வாத்தி, லக்கி பாஸ்கர் படங்கள் வெறும் 100 கோடி மட்டுமே வசூலை கொடுத்து வெற்றிப் பெற்றன. சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அதிகபட்சமாக 200 கோடி வரை வசூல் வர வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், கருப்பு அளவுக்கு வசூல் ஈட்டாமல் போக முக்கிய காரணமே வெங்கி அட்லூரி தான் என்றும் டோலிவுட் இயக்குநர்கள் இயக்கும் படங்களை தமிழ் ரசிகர்கள் பெரிதாக வரவேற்பதில்லை என்று கூறுகின்றனர். மேலும், அடிதடி ஆக்‌ஷன் படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குடும்ப படத்துக்கு பெரிதாக கிடைப்பதில்லை என்கின்றனர்.

ஜித்து மாதவன் படம் என்னாகும்?: சூர்யா அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியாவுடன் நடித்து வருகிறார். அந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் தள்ளிப் போனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறுகின்றனர். மலையாள இயக்குநர் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் அளவுக்கு வசூல் செய்தாலே பெரிய விஷயம் என்கின்றனர். எப்படியோ, சூர்யாவின் இன்றைய மார்க்கெட் மினிமம் 200 கோடி என்கிற அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் உயர்ந்துள்ளது.