Irumudi X Review
சென்னை: சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் இருமுடி. இதில் ப்ரியா பவானி சங்கர், சுவாசிகா உள்ளிட்டோர் அவருடன் நடித்திருக்கிறார்கள். படமானது இன்று திரையரங்குகளில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் எக்ஸ் விமர்சனம் தற்போது வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் ரவி தேஜா. அவர் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் இருமுடி. இதில் அவருடன் ப்ரியா பவானி சங்கர், சுவாசிகா, அஜய் கோஷ், சாய் குமார், பேபி நட்சத்திரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரவி ஹீரோ என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு ஏகப்பட்ட ஹைப் ஏற்றப்பட்டிருந்தது. அந்த ஹைப்போடு இன்று அந்தப் படம் தியேட்டர்களில் கோலாகலமாக ரிலீஸாகியிருக்கிறது.
எப்படி இருக்கிறது படம்?: படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றாலும்; எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ப்ரியா பவானி சங்கர் இந்தப் படத்தின் மூலம் தனது தெலுங்கு மார்க்கெட் நிலையானதாக மாறும் எனவும் கணக்கு போட்டிருக்கிறார். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமரச்னத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறர்கள்.
இருமுடி எக்ஸ் விமர்சனம்: படம் பார்த்த இந்த ரசிகர், "ரவி தேஜாவுக்கு இருமுடி சிறப்பான கம்பேக். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றி பேசும் நல்ல கருத்துடைய திரைப்படம். குழந்தையின் நடிப்பு அசத்தல். சாய் குமார் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு நன்றாக கை கொடுத்திருக்கின்றன.
லொக்கேஷன்களும் சிறப்பு. வழக்கமான கதைக்களமாக இருந்தாலும், முதல் பாதி மெதுவாகவும், இரண்டாவது பாதி,உணர்வுப்பூர்வமாகவும், ட்விஸ்ட்டுகளுடனும் இருக்கிறது. மொத்தத்தில் பார்க்கக்கூடிய நல்ல படம்" என புகழ்ந்திருக்கிறார்.
மாஸ் மகாராஜா: இந்த ரசிகர், "இது முழுக்க முழுக்க உணர்வு மற்றும் பக்தி கொண்டாட்டம். மாஸ் மகாராஜா ரவி தேஜா, பேபி நட்சத்திரா, சிவா நிர்வாணா இணைந்து நம்மை மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான பயணத்துக்கு அழைத்து செல்கிறார்கள். இருமுடி இந்தத் தலைமுறைக்கான தனித்துவமான படமாக இருக்கிறது. படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிற்கும் திரைப்படம். கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பாருங்கள். சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள்" என கொண்டாடியிருக்கிறார்.
முதல் பாதி ஸ்லோதான்: அவர்களைத் தொடர்ந்து இவர், "இருமுடி திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் அழுத்தமான மற்றும் நேர்மையான எமோஷனல் த்ரில்லராக இருக்கிறது. மெதுவாக நகரும் கதைக்களமாக இருந்தாலும் ஈர்ப்புடன் இருக்கிறது. முதல் பாதி ஸ்லோதான். இருந்தாலும் தந்தை - மகள் உறவை மையமாக வைத்து எமோஷனல் கனெக்ட்டை கொடுத்திருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் சில இடங்கள் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. வில்லன்களை தேவையற்ற அளவு கொடூரமாக காண்பித்தது மைனஸ். முக்கியமான ட்விஸ்ட்டுகள் ஓகே. படத்தின் எமோஷனல் அப்படியே இருக்கிறது. ரவி தேஜா சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நட்சத்திராவின் நடிப்பு அசத்தல்" என ப்ளஸ், மைனஸ் இரண்டையும் பட்டியலிட்டிருக்கிறார்.
உணர்வுப்பூர்வமான பயணம்: இந்தப் பக்கத்தில், "இருமுடி படத்துக்கு ஐந்துக்கு 3.25 மதிப்பெண் கொடுக்கலாம். இருமுடி வலுவான எமோஷன் மூலம் தனித்து நிற்கிறது. சிவா நிர்வாணா முதல் பாதியை சஸ்பென்ஸ், அர்த்தமுள்ள வசனங்களால் சுவாரஸ்யப்படுத்துகிறார். இரண்டாவது பாதியில் அழுத்தமான எமோஷன்கள் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. க்ளைமேக்ஸ் படத்துக்கு பலம். ரவி தேஜா தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். இது சமூக ரீதியான முக்கியமான படம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.