📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 23, 2026 07:05 PM

Irumudi Blue Sattai Maran Review

Irumudi Blue Sattai Maran Review

சென்னை: ரவி தேஜா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இருமுடி. இதனை சிவா நிர்வாணா என்பவர் இயக்கியிருக்கிறார். படமானது சில நாட்களுக்கு முன்பு ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகத்தில் பல வருடங்களாக ஹீரோவாக ஜொலிப்பவர் ரவி தேஜா. அவர் இப்போது இருமுடி படத்தில் நடித்திருக்கிறார். இதனை சிவா நிர்வாணா இயக்க ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தன்னுடைய வீடியோவில், "படம் பிளாஷ்பேக்கிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. கதையில் வெவ்வேறு பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவு வந்துகொண்டே இருக்கும். ஹீரோ தட்டி கேட்பார். வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும்வரை என்ன நடக்கிறது என்பதை என்னிடம் சொல்ல வேண்டும் என்று ஹீரோ சொல்வார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்யும். அதை வைத்துதான் எல்லோருடனும் சண்டை போட்டுக்கொண்டிருப்பார். அந்தப் பெண் ஒவ்வொரு விஷயத்தை சொல்லும்போதும் நமக்கு திக் திக்கென்று இருக்கும். அதையெல்லாம் ரொம்பவே நன்றாக செய்திருந்தார்கள்.

ஜூனியர் பாலைய்யாதான்: இந்தப் படம் ஓடும்போது அடுத்து என்ன நடக்கும் என்று கணிப்போம். அது நடக்கும். அதற்கு அடுத்தும் நாம் ஒன்றை கணிப்போம். ஆனால் அது நடக்காது. வேறு ஒன்று நடந்துகொண்டிருக்கும். இந்த திரைக்கதையில் உள்ள மேஜிக்கே அதுதான். அதை அற்புதமாக செய்திருக்கிறார்கள். இது ரவி தேஜா படம் என்பதால் பாலைய்யா படம் பார்க்கும்போது இருக்கும் மைண்ட் செட்டில் போய் பார்ப்போம். இவரும் ஜூனியர் பாலைய்யாதான். இதையும் அதுமாதிரிதான் நினைத்து பார்த்தோம். ஆனால் இது முழுக்க முழுக்க அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது.

கண்கள் எல்லாம் கலங்கும்: முடிந்த அளவுக்கு லைவ் லொக்கேஷனிலும், உண்மைக்கு நெருக்கமாகவும் செய்திருந்தார்கள். அது இந்தப் படத்துக்கு செம ப்ளஸ்ஸாக இருந்தது. இந்தப் படத்தின் ஹைலைட்டே அப்பா - மகள் வரும் சீன்கள்தான். உண்மையில் இரண்டு பேருமே அப்பா, மகள் மாதிரியே இருந்தார்கள். அதனால்தான் எல்லா எமோஷன் சீன்களும் நம்மிடையே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. அவ்வளவு நன்றாக கனெக்ட் ஆகும். கண்கள் எல்லாம் கலங்கிவிடும். ரவி தேஜா படம் என்றாலே இரண்டு, மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள்.

அருமையாக இருந்தது: இவர் செய்யும் சேட்டையிலிருந்துதான் அந்தப் பெண்களை காப்பாற்றும்படி இருக்கும். இதில் ரவி தேஜா பெண்களுக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதை அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். இதை நான் தமிழில்தான் பார்த்தேன். தமிழ் டப்பிங்கூட அருமையாக இருந்தது. வாய்ப்பு இருப்பவர்கள் தாராளமாக குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பாருங்கள்" என்றார். ப்ளூ சட்டை மாறனே இந்தப் படத்தை புகழ்ந்திருப்பது நெட்டிசன்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.